Tuesday, 30 November 2010

இலங்கையிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மிரட்டி விரட்டப்பட்டாரா?



இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை முதலில் பாராளமன்ற விவாதங்களாகவும் பின்னர் அறப் போராட்டமாகவும் நடத்தினர். இவை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் கைத்துப்பாக்கிகளுக்கும் கைக்குண்டுகளுக்கும் மாறின. பிராந்திய சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த இந்திய ஆட்சியாளர்கள் செய்த சதியின் விளைவு இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு பேரழிவு மிக்க ஆயுத மோதலை உருவாக்கியது. ஆரம்பத்தில் தமிழர்களின் "ஆபத்பாந்தவன்" போல் தன்னைக் காட்டி நாடகமாடிக் கொண்ட டில்லி பின்னர் தமிழர்கள் ஆயுத பலம் பெற்ற வேளையில் தனது உண்மையான தமிழ்த் தேசிய எதிர்ப்பு முகத்தை பகிரங்கப் படுத்தியது. அமைதிப் படை என்ற கொலை வெறி நாய்ப்படைகள் வடிவில் தமிழர்களைக் கடித்துக் குதறியது. அதன் பின்னரும் தமிழ்த் தேசியம் வீறு கொண்டு எழுந்த போது பின்கதவால் இலங்கைக்கு உதவி செய்யத் தொடங்கியது இந்தியா.

இலங்கையில் மும்முரமாக இன அழிப்புப் போர் நடந்தபோது இந்தியா பலமுறை போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன் வைத்தது. இலங்கை அரசும் உதாசினம் செய்தது. இது இலங்கை இந்திய உறவைப் பாதிக்கவில்லை. ஏன்? இந்தியா பகிரங்கமாக போலியான போர்நிறுத்தமே கேட்டது. திரை மறைவில் இந்தையாவே போரை நடாத்தியது. சிவ் சங்கர மேனனும் நாராயணனும் இலங்கைக்கு மேற்கொண்டபயணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின. அவர்கள் எப்படி தமிழர்களின் ஆயுத போராட்டத்தை மழுங்கடிக்கவே உதவிகள் செய்து கொண்டிருந்தனர். ஆனால் பாக்கு நீரிணைக்கு இருபுறத்திலும் இருக்கும் டெல்லியின் அடி வருடிகளும் அவர்களின் ஊடகங்களும் நாராயணனும் சிவ் சங்கர மேனனும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவே இலங்கை செல்வதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழர்கள் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு காணமுடியாது அரசியரல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று இந்தியா பலமுறை அறிகை விட்டது. இதுவும் போலியானதே. போர் முடிந்து விட்டது. இலங்கையை அரசியல் தீர்விற்கு இந்தியா நிர்பந்திக்கவில்லை. மாறாக இலங்கைக்கு இந்தியா பெரும் தொகைப் பணம் வழங்கியுள்ளது.

கிருஷ்ணா கூறியவை
இலங்கைக்கு சென்ற வாரம் பயணம் மேற் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இப்படிக் கூறினார்:
  • ஆயுதப் போராட்டம் முடிவுற்ற நிலையில் தேசிய நல்லிணக்கத்துக்கான அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்தச் சாதகமான நிலைமையைப் பயன்படுத்தி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி, ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத் தும் என்று இந்தியா நம்புகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் சமூகங்களின் பங்களிப்புடன் விரை வில் ஆரம்பமாகும் என்று நாம் நம்புகிறோம்.
எஸ் எம் கிருஷ்ணா இலங்கைப் பயணம் செய்கிறார் என்றவுடன் பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள இந்திய அடிவருடிகளும் அடிவருடி ஊடகங்களும் அவர் வந்து அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தப் போகிறார் என்று பெரும் கூச்சலிட்டனர். இவரது பயணமும் நாராயணன் - மேனன் பயணம் போலவே வெளியில் சொல்வது ஒன்று உள்ளுக்குள் நடப்பது வேறு. இலங்கையினதும் இந்தியாவினதும் தமிழர்களுக்கு எதிரான கூட்டுச் சதியில் இப்போது முக்கியத்துவம் பெறுவது தமிழர் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் சுதந்திர வேட்கையை இனி தலை எடுக்காமல் பண்ணுவதே அதற்கு சிங்கள மக்கள் தமிழ் பகுதிகளுக்கு இலகுவாக வந்து போவற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். அதற்காகத்தான இந்தியா தமிழர் பகுதிகளுக்கான தொடரூந்து சேவைகளை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டுகிறது.

50,000 வீடுகள்
இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களின் பல இலட்சக் கணக்கான வீடுகளை அழித்தொழித்தது. இப்போது இந்தியா தமிழர்களுக்காக 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப் போவதாக பிதற்றிக் கொண்டிருக்கிறது. இந்த 50,000 வீடுகள் கட்டும் பணி மும்பாயில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த இந்திய ஆட்சியாளர்களின் ஒரு சதி. குறிப்பிட்ட அந்த மும்பாய் நிறுவனம் எவ்வளவு பணம் யாருக்குக் கொடுக்குமோ?

காசைக் கொடுத்துவிட்டு பொத்திக்கிட்டுப் போய்யா
கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை Time for political solution: Krishnaஎன்ற தலைப்பில் வெளிவிட்ட செய்தி சிங்கள மக்களை ஆத்திரமடையச் செய்தது. இதற்கு அவளிட்ட பின்னூட்டங்கள்:
  • of course it is for Kashmir problem,not in Sri Lanka. India created the problem.
  • All those who commented have very short memories Mr.Krishna,You have a short memory too. India should stop this type of intimidation before its too late. No other country in the world try to dictate terms of a neighbouring country like India. Listen Krishna........
  • Leave us alone and get lost for good.
  • We could manage our own affairs. Try to resolve your own concerns at Tripura, Punjab, Misori ect...
  • I think Krishanan should find a political solution to the 17 ongoing separatist movements in India before advising Sri Lanka.
  • Time for a political solution for Kashmir.
  • Mr. Krishna dude, mind your own business.
மொத்தத்தில் சிங்களவர்கள் கிருஷ்ணவிற்கு சொல்வது காசைக் கொடுத்துவிட்டு பொத்திக்கிட்டுப் போய்யா என்பதுதான்

கோவிந்தா கோவிந்தா
எஸ் எம் கிருஷ்ணா தமிழ்த் தலைவர்களை சந்திப்பார் என்று முதலில் கூறப்பட்டது ஆனால் அவரை நம்பியிருந்தவர்கள் நெற்றியில் பட்டை நாமம் தீட்டி கோவிந்தா கோவிந்தா எனக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டார் எஸ் எம் கிருஷ்ணா. ஆனால் கிருஷ்ணா இலங்கைக்கான 1.7பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப்பற்றி சிங்களவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

மிரட்டி விரட்டப்பட்டாரா எஸ் எம் கிருஷ்ணா?
எஸ் எம் கிருஷ்ணா தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலையகத் தமிழர்கள் முஸ்லிம் தரப்பு ஆகியோரைச் சந்திப்பதாக நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர் தரப்பினரை சந்திப்பதை எஸ் எம் கிருஷ்ணா இரத்துச் செய்துவிட்டு முஸ்லிம்களை மட்டும் சந்தித்தார். இதற்கு இந்தியத் தூதுவராலயம் கூறிய நொண்டிச் சாக்கு கால நிலை சரியில்லை என்பதாகும். இச்சந்திப்புகள் என்ன கூரைகளில்லாத வன்னி முகாமிலா நடக்க இருந்தன? நட்சத்திர விடுதிகளுக்குள் வெள்ளமா? இப்போது இலங்கையின் ஆதரவு ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவிற்குத் தேவை. தமிழர்கள் பிரச்சனையில் நாம் சொன்னபடி கேட்காவிட்டால் ஆதரவு கிடைக்காது என்று இலங்கை எஸ் எம் கிருஷ்ணாவை மிரட்டி தமிழர்களைச் சந்திக்க வேண்டாம் தமிழர் விவகாரத்தில் நாம் சொல்வதைக் கேள் என்று விரட்டப்பட்டாரா பாவம் கிருஷ்ணா?

6 comments:

Anonymous said...

எஸ் எம் கிருஷ்ணா தமிழ்த் தலைவர்களை சந்திப்பார் என்று முதலில் கூறப்பட்டது ஆனால் அவரை நம்பியிருந்தவர்கள் நெற்றியில் பட்டை நாமம் தீட்டி கோவிந்தா கோவிந்தா எனக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டார் எஸ் எம் கிருஷ்ணா. ஆனால் கிருஷ்ணா இலங்கைக்கான 1.7பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப்பற்றி சிங்களவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

இந்தியன் said...

ங்கோத்தா இந்தியா உதவி இல்லாமல் நீங்க ஜென்மத்துக்கும் ஈழமும் வாங்க முடியாது ஒரு புண்ணாக்கும் வாங்க முடியாது.

Anonymous said...

இந்தியா எந்தக்காலத்தில் தமிழனுக்கு உதவியது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் முதலாம் எதிரி இந்தியா. தனது சொந்த நாட்டு மீனவர்களைக் கொன்று தொலைக்க உதவும் மானங்கெட்ட நாடு இந்தியா...

Anonymous said...

அட முட்டாள் இந்தியனே உன் மண்ணில் உன் சகோதர மீனவர்களையே கொன்றுகுவித்துக் கொண்டிருக்கும் சிங்கள வெறியனுக்கு நிதியை அள்ளிக கொடுத்துக் கொண்டு கால் நக்கி அவமானப்பட்டுக் கொண்டு திரும்புகிறான் உன் நாட்டு அரசியல் வியாதிகள். எம் மணணை மீட்டெடுக்க எமக்குத் தெரியும். எம் புலம் பெயர் மக்களின் உழைப்பு அதற்கு உறுதுணை செய்யும். நாம் தலைநிமிர்ந்த இருந்தது எமது உழைப்பினால் அன்றி அந்நியனின் நி(ர்)வாரணத்தால் அல்ல. உன் நாட்டானுக்கு செருப்படி கொடுக்கத்தான் உன் நாட்டு வியாதி வரும் போது பாக்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதியையும அழைத்தது செங்கம்பள வரவேற்புக் கொடுத்தது சிங்களம். கீழே குனிந்து பார் உன் கோவணத்தையும் சிங்களம் உரிந்து உன்னை அம்மணமாக நிற்க விட்டிருப்பதை. நாங்கள் புண்ணாக்கு வாங்குகிறோமோ இல்லையோ ஆனால் நீங்கள் அடிக்கடி செருப்படி சிங்களத்திடம் வாங்கிக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். உங்கள் வல்லரசுக்கனவுக்கும் சி்ங்களம், சீனா பாக்கிஸ்தானுடன் சேர்ந்து சீக்கிரம் வினை வைக்கப் போகிறது. அதனை முதலில் கவனி.எம்மை எமது ஈழ கனவை நனவாக்குவது எப்படி என்பது எமக்குத தெரியும் முட்டாளே

Anonymous said...

உலகெங்கும் வாழும் தமிழர்களின் முதலாம் எதிரி இந்தியா.
அதனாலே எங்க தலைவர் இந்தியா எங்கள் தந்தை நாடு என்று கூறினார்

Anonymous said...

excellent picture

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...