
கண்ணைக் கவர்ந்தது
உள்ளம் கவரவில்லை
காமம்
இதயத்தின் முனகல்
வேதனையின் வெளிப்பாடு
பெரு மூச்சு
அழகற்றோர் அழகாகத் தெரிவர்
தேவையற்றோர் தேவையானவராவர்
காதல்
கல்லுக் கிடைக்கும் வரை
நாய்மீது அன்பு காட்டு
ராஜதந்திரம்
பணம் முடிந்தது
மாதம் முடியவில்லை
வறுமை
கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்
கண்காணிப்பின்றிக் கருகுகிறது
சுதந்திரம்
முதுமை விலையாவது
தவறுகளில் பெறுவது
அனுபவம்
1 comment:
very nice
Post a Comment