Tuesday, 12 October 2010

தடிமன் பற்றி புதிய கண்டு பிடிப்புக்கள்.


வாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் தடிமனால் அவலப்படுகிறார். உலகில் மிக அதிகமாகப் பிடிக்கும் நோய் தடிமனாகும். கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி தடிமன் பற்றிப் பல நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்கியுள்ளது.

Jennifer Ackerman என்னும் விஞ்ஞானி தடிமன் பற்றிக் கண்டறிந்த உண்மைகள்:

1. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தடிமனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன தெரியுமா? பலமான நோய் எதிர்ப்புச் சக்தி தடிமனைக் கொண்டுவருமாம். Cold symptoms do not result from the ­destructive effects of viruses but rather from how strongly your immune system reacts to them. In other words, terrible cold symptoms are the product of a strong immune system, rather than a weak one.

2. விட்டமின் சி மாத்திரைகள் தடிமனைக் குணப்படுத்தாது.

3. மதுபானம் பாவித்தல் தடிமன் வருவதை அதிகரிக்காது ஆனால் குறைக்கலாம்.

4. முத்தமிடுவதால் தடிமன் தொற்றாது. தடிமன் கிருமிகள் மூக்கினூடாகவும் கண்ணினூடாகவும் அதிகமாக எமது உடலில் பிரவேசிக்கின்றன. தடிமன் கிருமி உள்ள இடங்களை எமது கைகளால் தொடுவதாலும் தடிமன் பரவலாம்.

5. பாதிக்கப் பட்ட ஆடைகளை துவைப்பது தடிமன் கிருமிகளைக் கொல்லாது.

6. தடிமன் வந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பது பயன் தராது.

7. பலமாக மூக்கைச் சிந்துதல் பயன் தராது. மாறாக உங்கள் கபாலத்தில் கிருமிகள் பரவ வழி செய்யும்.

8. கிருமிக் கொல்லி சோப்புக்கள் பயன்தராது.

9. போர்வைகளால் மூடுவது பயன் தராது

10. மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும்

11. அதிக நீராகாரம் அருந்துவது பெரிய பயன் தராது

12. கோழி சூப் தடிமனைத் தடுக்கும்.

13. உங்களுக்கு அடிக்கடி தடிமன் வந்தால் உங்கள் ஜீன்கள்தான் காரணம். உங்களுக்கு அதிகம் தடிமன் வந்தால் உங்கள் பரம்பரைக் குறைபாடுதான் காரணமாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...