
பாதிக் கிணறு தாண்டிவிட்டு
பாதாளத்தில் விழுந்துவிட்டு
போராட்டத்தின் புதுவடிவம்
எனப் புதுக்கதை பேசவில்லை
தூரோகங்கள் நிறைந்த பூமியில்
போராட்டங்களின் வரலாறு
பின்னடைவுகளின் வரலாறாகும்
தகராறுகள் தீராமல்
போராட்டம் முடிந்ததாக
வரலாறு எங்கும் இல்லை.
துணைவர்கள் என நம்பியவர்காள்
எம்மை முடக்கினர்
நண்பர்களாக நடித்து
எம்மை முடக்கினர்
வீழ்ந்தோம் என்பது
எழாமையே
தோற்கவில்லை என்பது
முயலாமையே
வெற்றிப் பள்ளியின்
பரீட்சைக் கட்டணமே
தோல்வி
1 comment:
சகோதரா தங்களின் வரிகள் பல அழுத்தமான பொருளை சொல்லிப் போகிறது... வாழ்த்தக்கள் நானம் வன்னி இறுதிப்போரில் மீண்டவன் என்ற ரீதியில் சில கருத்தை சொல்கிறேன்... இனி ஒரு போர் இலங்கையில் வரப் போவதில்லை... பாதிக்கப்பட்ட எவனும் அயுதம் எடுக்கமாட்டான் ஏனென்றால் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. .இது தான் உண்மை (அதற்காக நாக்கை தூக்கி நிற்கம் சில வெளிநாட்டவருக்கு நாக்கால் தான் சாவு என்று வராது)
mathisutha.blogspot.com
Post a Comment