
உலகம் உன்னை ஏற்க
உன்னை நீ ஏற்றுக் கொள்
தன்னம்பிக்கை
மௌனத்தின் சுவை மொழி
காதலின் இணை வழி
உதடுகளின் உரசல்
சாத்தியப்படாதவை எதுவுமில்லை
சாதிக்க முடியாதது எதுவுமில்லை
காதலிலும் கனவிலும்
எதையும் செய்யலாம் என் நம்பு
எல்லாவற்றையும் செய்யமுடியாது
ஒன்றே செய் இன்றே செய்
ஊரோடு ஒத்து வாழ்
ஊரோடு சேர்ந்து ஏமாறாதே
தேர்தல்
அறியாமல் வைத்த நம்பிக்கை
புரியாமல் செய்த உடன்பாடு
அழிவு
விலைகளை அறியலாம்
மதிப்புக்களை அறிய முடியாது
உலக வர்த்தகம்
ஒருவரை ஒருவர் விரும்புவதல்ல
ஒரே திசையில் செல்ல விரும்புவது
காதல்
பெற்றோர் விட்ட தவறுகளைப்
பிள்ளைகளும் செய்கின்றனர்
மக்கள் தொகைப் பெருக்கம்.
2 comments:
நல்ல பஞ்ச் டயலாக்
சமூக விசயங்களை நன்றாக கவிதையாக்கி உள்ளீர்கள்! நன்று!
Post a Comment