Tuesday, 5 October 2010
இத்தாலிச் சனியாளின் மர்மம் அறிந்து கொண்ட பக்சராஜன்
பக்சராஜன் டெல்லி சென்றிருந்த வேளை இத்தாலிச் சனியாளைச் சந்தித்து அதிகாரம் எப்படிக் கையில் வைத்திருப்பது என்பது பற்றி உரையாடினார். மடம் நீங்கள் பதவியில் இல்லாமல் எப்படி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வியப்புடன் கேட்டார். உடனே சனியாள் இப்போது ஒரு உதாரணத்தின் மூலம் உங்களுக்கு விளக்குகிறேன் என்று கூறிவிட்டு. தனது பிரதம மந்திரியை அழைத்தார். அவர் வந்து பணிவுடன் சனியாள் முன் பவ்வியமாக நின்றார். மோகன்மன் சிங்கா நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல் என்றார். மோகன்மன் சிங்கயா வாய் பொத்தி நின்றார்.
"உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" என்று கேள்வியைப் போட்டார். பிரதம மந்திரி மோகன்மன் சிங்கயா உடனே அமெரிக்க பெண்டகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு தன் பதிலை கண்ணை மூடி நின்றபடி சொன்னார். "நான்தான் அது மடம்".
கெட்டிக்காரப் பயல் என்று கூறு சனியாள் மோகன்மன் சிங்கயாவை அனுப்பிவிட்டார். இதுதான் என் அதிகாரத்தின் மர்மம். நான் நல்ல அறிவாளிகளைத் அடிமையாகத் துணைக்கு வைத்திருக்கிறேன் என்றார் சனியாள்.
பக்சராஜனுக்கு மிக்க மகிழ்ச்சி. தான் சனியாளின் மர்மத்தை அறிந்து கொண்டேன் என்று துள்ளிக் குதித்தார். தான் நாடு திரும்பியதும் தனது பிரதம மந்திரியை அழைத்து "உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" என்று கேள்வியைப் போட்டார். பிரதம மந்திரி திருதிருவென விழித்துவிட்டு நான் யோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்று விட்டுப் போய்விட்டார். தனது சகாக்கள் அனைவரையும் அழைத்து பக்கசராஜனின் கேள்வியை முன்றரை மணித்தியாலங்கள் விளக்கி அதற்கான பதிலை யோசித்து ஒரு வாரத்துக்குள் தரும்படி கூறினார். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் ரோ அமைப்பின் ஊடாக தேவையில்லாதானந்தாவிற்கு எஸ் எம் எஸ் மூலம் வந்துவிட்டது. அந்த இடத்திலேயே தேவையில்லாதானந்தா பதிலைக்கூறினார். நீங்கள்தான் அது என்று.
மிக்க மகிழ்ச்சி அடைந்த பிரதம மந்திரி பக்சராஜாவைச் சந்திக்க மீண்டும் அனுமதி கேட்டபோது மூன்று மாதம் கழித்துக் கிடைத்தது. பிரதம மந்திரி பக்சராஜாவைச் சந்தித்தபோது தான் கேள்வி கேட்டதையே அவர் மறந்துவிட்டார். பிரதம மந்திரி அதை நினைவு படுத்தினார். சரி சரி பதில் கண்டு பிடித்து விட்டாயா என்று பக்சராஜன் ஆர்வத்துடன கேட்டார். பதில் வந்தது நீங்கள்தான் அது என்று.பதிலைக் கேட்டதும் கோபத்தில் துள்ளிக் குதித்தார் பக்சராஜா இப்படி ஒரு சிறு கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா உன்னால். உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்தவன் நான். உலகத்தில் சிறந்த தலைவன் நான் எனக்கு இப்படி ஒரு பிரதம மந்திரியா என்று பொரிந்து தள்ளினார். பிரதம மந்திரி அழத் தொடங்கிவிட்டார். திருப்பிப் பார் அந்தக் கேள்வியை.
"உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" இதுதாண்டா கேள்வி. இதுக்குச் சரியான பதில் மோகன்மன் சிங்கயா!!! என்றுகூறி பிரதம மந்திரியை அடித்து விரட்டினார் பக்சராஜன்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
தேவையில்லாதானந்தா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!சூப்பர்!!!!!!!
மர்மஸ்தானத்தை அறியவில்லையா???
super..................................................
Post a Comment