Wednesday, 6 October 2010
பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்களும் ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்களும் செய்ய வேண்டியவை.
தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்படித் திருப்திப்படுத்துவது என்பதுதான் உலகம் தோன்றிய நாள் முதலாக உள்ள பெரிய பிரச்சனை. ஆனால் இந்தப் பிரச்சனை மற்றப் பிரச்சனைகள் போலப் பெரிதாகப் பேசப்படுவதில்லை. இது பற்றிய ஒரு ஆராய்ச்சி:
பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டியவை:
1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்
5. வாரந்தோறும் திரைப்படங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்
6. வாரந்தோறும் நல்ல உணவகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
7. அடிக்கடி அவர்கள் அழகாக இருகிறார்கள் அல்லது கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
8. ஒரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ திரிஷாவைப் போலிருக்கிறாய் என்று. இன்னொரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ தமனாவைப் போலிருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி அவர்கள அங்கங்களையும் அவ்வப்போது பிரபலமான நடிகைகளின் அங்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். உன் சிரிப்பு சுனைனா போலிருக்கிறது. இடை அனுஷ்க்கா போலிருக்கிறது. முக்கிய குறிப்பு நமிதாவை ஒப்பிட வேண்டாம். பிறது உதுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு திரிகிறியளோ என்று உதை வாங்க வேண்டி வரலாம்.
9. அவர்கள் சேலை உடுக்கும் போது பக்கத்தில் நின்றும் இருந்தும் மடிப்புக்க்களை சரியாக சரி செய்து விடவேண்டும்
10. அவர்களை அவர்களுக்குத் தேவைப்படும் போது நன்றாகத் திருப்திப்படுத்த வேண்டும்.
11. அவர்கள் நச்சரிப்புக்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
12. அவ்வப்போது அவர்கள் சொல்லும் உடல் வருத்தங்களை அவை போலியாக இருந்தாலும் கரிசனையுடன் கேட்டு அதற்கு பணம் செலவழித்து வைத்தியம் செய்ய வேண்டும்.
13. அவர்களை சிரிக்கவைக்க நல்ல நகைச்சுவைகள் சொல்லவேண்டும்
14. அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
15. உங்களின் உறவினர்கள் பற்றி அவர்கள் சொல்லும் குறைகளை ஆமோதிக்க வேண்டும்.
16. தொலைக்காட்சி(சென்னைத் தமிழில் டிவி) ரிமோட்டை அவர்கள் கைகளிலேயே விட்டு விடவேண்டும்
17. அவர்களுடன் இருந்து தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டும்
18. அவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
19. அவர்கள் மணித்தியாலக் கணக்காக தொலைபேசியில் கதைக்க அனுமதிக்க வேண்டும்.
20. பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
21. பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்
22. அவர்கள் செய்வதில் எவற்றை கண்டுக்காமல் இருக்க வேண்டும் எவற்றின்மீது கரிசனை காட்ட வேண்டும் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.
23. அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
24. அவர்கள் மீது அன்பாயிருக்க வேண்டும்.
25 அவர்கள் மீது ஆசையாய் இருக்க வேண்டும்.
26. இப்போது மீண்டும் முதலாவதிற்கு சென்று அங்கிருந்து தொடரவும்.
ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்கள் செய்ய வேண்டியவை:
கவர்ச்சிகரமான உடையுடன் நல்ல சாப்பாட்டுடன் அவர்கள் முன் நிற்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
8 comments:
செம காமெடி.16வது பாயிண்ட்டில் டி வி என திருத்தவும்.பெண்கள் செய்ய வேண்ண்டியது என குறிப்பிட்டது செம தூள் வாத்தியாரே
ஆண்கள் செய்ய வேண்டிய 10ம் இலக்க விடயத்தை விலாவாரியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று என் நண்பன் சொல்லச் சொன்னான்.
sateya sonnappa ennila etuntu nan un sisyan
அது எது நமிதாவினது மாதிரி என்று சொல்ல வேண்டும்.....
imputtu matter irukirathaa?
சும்மா சொல்லபிடாது!அப்புடியே அனுபவம் பேசுது!!!!!!
ஆண் ஆதிக்கம் கதைக்கின்றது!!!!!!!
அப்பிடியே பிடியும் ஒரு பட்டம்:
BORE KING !
Post a Comment