
அந்தப் பேருந்தில் ஏறிய அந்த இளைஞனுக்கு ஓட்டுனரின் பின்னால் இருந்த ஆசனத்தில் ஒரு கன்னியாஸ்திரிக்குப் பக்கத்தில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த கன்னியாஸ்திரியின் அழகில் அந்த இளைஞன் சொக்கிப் போனான். உன்னை முத்தமிட விரும்புகிறேன் என்று அந்த இளைஞன் அந்தக் கன்னியாஸ்த்திரியிடம் மெதுவாகச் சொன்னான். தங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பராக என்று அந்தக் கன்னியாஸ்த்திரி சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கிச் சென்று விட்டார். பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனை தன் அருகில் அழைத்து உன் ஆசையை நிறைவேற்ற ஒரு வழி சொல்கிறேன். வரும் வெள்ளிக் கிழமை இரவு அந்தக் கன்னியாஸ்த்திரி இடுகாட்டிற்கு இறந்த தன் தந்தைக்காக பிரார்த்தனை செய்ய வருவார். அங்கு நீ கடவுள் வேடத்தில் போய் அவளை அவளுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சிலுவையக் கொடுத்து அவளுக்கு ஆசீர்வதிப்பது போல் அவளை முத்தமிட்டுக் கொள் என்றான். அந்த இளைஞனும் அப்படியே செய்தான். எல்லாம் பேருந்து ஓட்டுனர் சொன்னபடியே நடந்தது. இளைஞன் விருப்பப்படி கட்டி முத்தமும் கொடுத்தாகிவிட்டது. கன்னியாஸ்திரியும் கடவுளுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். இளைஞன் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து தன் கடவுள் வேடத்தைக் கலைத்து நான்தான் உன்னிடம் பேருந்தில் முத்தம் கேட்டவன் என்றான். "கன்னியாஸ்த்திரி"அமைதியாக தன் முகத்திரையை நீக்கி நான்தான் அந்தப் பேருந்து ஓட்டுனர் என்று கூறிவிட்டு நழுவிவிட்டான்.
5 comments:
Thalaippai maatravum. oru mathathai izhivu paduthukirathu
Entha mathamum Izhivukku peramballa. Islam ondruthan thavirkappadum.. en endraal nagaichchuvaikku apparpatta madham adhu..
Dont publish such silly jokes. Dont encourage any religious based jokes. it will hurt the people....
Only stupid people think this post hurt the feeling of anyone.
This has nothing to do with any religion.
enna kodumai ithu?????
Post a Comment