Wednesday, 29 September 2010
அந்த மாதிரி விளம்பரங்கள் - பலான அர்த்தங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தப் பெரும்பாடுகள் படுகின்றன. அவை செய்யும் விளம்பரங்களின் வினைகள் சில:
ஹொண்டா நிறுவனம் Fitta என்னும் பெயரில் ஒரு வண்டியை அறிமுகம் செய்ய முற்பட்டது பின்னர் அந்த சொல் சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளில் பெண் உறுப்புக்கான அசிங்கமான சொல்லாக வழக்கத்தில் உள்ள படியால அந்தச் சொல்லை விட்டு Jazz என்று பெயரிட்டது
Gerber என்ற பிரபல அமெரிக்க நிறுவனம் தனது பிள்ளைகளுக்கான உணவுப் பொருட்கள் ஏன் சில ஆபிரிக்க நாடுகளில் விற்பனை ஆகவில்லை என்று ஆராய்ந்து பார்த்ததில் கண்டறிந்து கொண்டது. Gerber என்பது வாந்தி என அங்கு பொருள்படும் என்று.
Umbro என்னும் விளையாட்டுத்துறைப் பொருட்கள் உறப்பத்தி செய்யும் நிறுவனம் தனது காலணிக்கு Cyclone என்று பெயரிட்டது. அது ஜேர்மன் மொழியில் ஹிட்லர் பாவித்த நச்சு வாயு என்று பொருள்படும் என்று அறிந்து மாற்றிக் கொண்டது.
அமெரிக்க நிறுவனமொன்று பாப்பாண்டவர் ஸ்பெயினிற்கு பயணம் செய்த போது I saw Pope என்று ஸ்பானிய மொழியில் T-shirtஇல்எழுதி விற்பனை செய்வதாக நினைத்து I saw potato என்று எழுதித் தொலைத்து விட்டது.
கொக்க கோலா நிறுவனம் தனது பானத்தை சீனாவில் முதலில் அறிமுகப் படுத்தும் போது Ke-kou-ke-la எனச் சீனமொழியில் விளம்பரப் படுத்தியது அது சீன மொழியில் மெழுகு அடைக்கப் பட்ட பெண் குதிரை என்று பொருள்படுமாம்.
Kentucky Fried Chicken ஒருகாலத்தில் ஒரு காலத்தில் "finger-lickin' good" என்ற சுலோக விளம்பரம் செய்தது. அதை மொழி பெயர்த்தவர் செய்த தவறால் அந்தச் சுலோகம் சீன மொழியில் "eat your fingers off" என்று வந்துவிட்டதாம்.
இன்னொரு கோழி விளம்பரம்:
Frank Perdue's chicken slogan, "it takes a strong man to make a tender chicken" was translated into Spanish as "it takes an aroused man to make a chicken affectionate."
அமெரிக்க Salem cigarettes ஜப்பானில் சந்தைப்படுத்தியபோது "Salem - Feeling Free," என்ற சுலோகம் "When smoking Salem, you feel so refreshed that your mind seems to be free and empty." என்னும் பொருள்படும்படி மொழிபெயர்க்கப்பட்டது.
அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது Nova வாகனங்களை தென் அமெரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தும்போது அங்கு Nova என்பது போகாதது என்று அர்த்தப்படும் என்று உணர்ந்திருக்கவில்லை.
பார்க்கர் பேனா நிறுவனம் மெக்சிக்கோவில் தனது பேனாக்களை அறிமுகப்படுத்தும் போது ஏற்பட்ட மொழிபெயர்ப்புத் தவறு பார்க்கர் பேனா உங்களைக் கர்ப்பமடையச் செய்யாது என்று வந்துவிட்டதாம். அவர்கள் சொல்ல முயன்றது தங்கள் பேனாக்கள் வழிந்து உங்கள் பாக்கெட்டை நனைக்காது என்பதுதான்.
இத்தாலியில் Schweppes இன் Tonic Water ஐ Toilet Water ஆக மொழி பெயர்த்து விட்டனர்.
கொரிய மோட்டார் வண்டியின் பெயர் அது ஜோர்டானிய மொழியில் பேய் என்று பொருள் படும்.
பெப்சி மட்டும் விட்டுவைத்ததா? Pepsi's "Come alive with the Pepsi Generation" translated into "Pepsi brings your ancestors back from the grave", in Chinese.
Electrolux தனது உற்பத்திப் பொருளை Nothing sucks like an Electrolux என்ற சுலோகத்துடன் அமெரிக்காவில் விளம்பரப்படுத்தியது. அதற்கு sucks என்ற வார்த்தையின் மற்ற அர்த்தம் புரிந்திருக்கவில்லையோ?
ஒரு நாய் விற்பனை விளம்பரம்:
"Dog for sale: eats anything and is fond of children."
உணவகம் இப்படி ஒரு விளம்பரம் செய்தது:
"Dinner Special -- Turkey $2.35; Chicken or Beef $2.25; Children $2.00" சிவபெருமான் பிள்ளைக்கறி அங்கு சாப்பிட்டிருப்பாரோ?
இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். பூட்டோ என்றால் மலாய மொழியில் ஆண் உறுப்பு. மிஸ் பூட்டோ என்று பாக்கிஸ்தானியப் பிரதமரை அணிசேரா மாநாட்டில் மலேசியாவில் நடந்த அறிமுகம் செய்யும்போது மலேசியப் பிரதமர் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
நல்ல தகவல்கள்..வாழ்த்துக்கள்
இதற்குள் சிவபெருமானும் அகப்பட்டு விட்டார்...
Post a Comment