Thursday, 30 September 2010

சிரிக்க மட்டும்: மூன்று தமிழர்களும் மூன்று மலையாளிகளும்


மாவட்ட ஆட்சியாளர்களான மூன்று தமிழர்களும் மூன்று மலையாளிகளும் ஒரு தொடருந்தில் நீண்டபயணத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு மாநாட்டிற்காக மேற்கொண்டனர். தமிழர்கள் மூவரும் மூன்று பயணச்சீட்டுக்கள் வைத்திருந்தனர். ஆனால் மூன்று மலையாளிகளும் ஒரு பயணச்சீட்டுடன் மட்டும் பயணம் செய்தனர். இதையறிந்த தமிழர்கள் மூவரும் ஆச்சரியப்பட்டு இது எப்படி என்று மலையாளிகளைக் கேட்டனர். அதற்கு மலையாளிகள் பயணச் சீட்டுப் பரிசோதகர் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

தொடருந்து போய்க்கொண்டிருக்கையில் பயணச் சீட்டுப் பரிசோதகர் வந்தார் மூன்று மலையாளிகளும் கழிப்பறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டனர். கழிப்பறை கதவை பயணச் சீட்டுப் பரிசோதகர் தட்டியபோது ஒரு கை மட்டும் பயணச்சீட்டுடன் மெல்லத் திறந்த கதவு இடை வெளியூடாக வந்தது. பயணச் சீட்டுப் பரிசோதகர் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.

தமிழர்களுக்கு ஒரே ஆச்சரியம். தாம் இதையே திரும்பும் பயணத்தில் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டர். திரும்பும் பயணத்தில் மூன்று தமிழர்களும் ஒரே சீட்டுடன் வந்தனர். ஆனால் மலையாளிகள் ஒரு பயணச் சீட்டுக் கூட இல்லாமல் வந்தனர். தமிழர்கள் மூவருக்கும் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். பொறுத்திருந்து பாருங்கள் என்றனர் மலையாளிகள். டெல்லியில் இருந்து சென்னைக்கான தொடருந்துப் பயணம் தொடங்கியது. மலையாளி ஒருவர் சொன்னார் பயணச் சீட்டுப் பரிசோதகர் பரிசோதகர் வருகிறார் என்று. மூன்று தமிழர்களும் விழுந்தடித்துக் கொண்டு கழிப்பறைக்குள் முடங்கிக் கொண்டனர். மூன்று மலையாளிகளில் ஒருவர் தமிழர்கள் இருந்த கழிப்பறைக் கதவைத் தட்டி ticket please என்றார். உள்ளிருந்து ஒரு கை பயணச் சீட்டுடன் வெளிவந்தது. அந்த மலையாளி லபக்கென்று அந்தப் பயணச் சீட்டைப் பிடுங்கிக் கொண்டார்.
(சிரிக்க மட்டும். யாரையும் புண்படுத்தவல்ல)

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...