Sunday, 20 June 2010

இலங்கைக்கு புலிகளின் சொத்துக் கையளிப்பின் பின்னணி என்ன?


தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ஒன்பது பேர் கனடா, சுவிர்ச்சலாந்து, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை சென்று இலங்கை பாதுகாப்புச் செயலரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்து போருக்குப் பின்னரான புனரமைப்பு புனர்நிர்மாணம் தொடர்பாக கலந்துரையாடியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அப்பத்திரிகை இச்சந்திப்பை கொழும்பில் இருந்து கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன் ஒழுங்கு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இலங்கையில் மீண்டும் ஆயுத போராட்டம் தலைதூக்க்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும். உலகின் வேறு பாகங்களிலுமுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்களை இலங்கை அரசு இதற்காக கைப்பற்ற வேண்டும். விடுதலைப்புலிகளின் முக்கிய நோக்கம் இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள தமது போராளிகள் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரை உயிருடன் பாதுகாப்பதாகும். இந்த இரண்டு நோக்கங்களின் இசைவே மேற்படி சந்திப்பாகும்.

விடுதலைப் புலிகள் தமது சொத்துக்களை கையளித்து அதன் மூலம் இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள விடுதலைப் புலிப்போராளிகளை விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக அறியப்படுகிறது. பத்மநாதன் இதற்காகவே இலங்கை அரசிடம் "சரணடைந்ததாகவும்" கூறப்படுகிறது. இலங்கை அரசு விடுவிக்கும் போராளிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்றும் அவர்கள் இலத்திரனியல் கண்காணிப்புக்கு (electronic tagging) உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் போராளிகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் மட்டும் அவர்களை நடமாட வைக்க முடியும். அவர்கள் அவர்களது பிரதேசத்துக்கு வெளியில் போகுமிடத்து அவர்களின் உடலில் பொருத்தப் பட்டிருக்கும் இலத்திரன் கருவி அவர்களது கண்காணிப்பு நிலையத்திற்கு சமிக்ஞை அனுப்பும். அத்துடன் அவர்கள் இருக்கும் இடம்பற்றிய தகவலையும் வழங்கும். இதன் மூலம் அவர்கள் கைது செய்யப் படுவர். பல நாடுகள் இத் தொழில் நுட்பத்தை குற்றாவாளிகள் மீது இப்போது பிரயோகிக்கின்றன.

4 comments:

Anonymous said...

if this is true KP is a hero

Anonymous said...

if that is true then KP planned this since 2006 when he was arrested by Bangkok rehgeme and fis release was secured by Mharjee

Anonymous said...

எதிரி எவ்வளவு சூட்சிகளிலும் இறங்குவான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உண்மையை உரைக்கும்.
வலையில் விழாமல் ஆராய்ந்து செயல் பட வேண்டும்.அவன் ந்ம்மை ஏமாற்றுகிறானா, நாம் அவனைப் பயன் படுத்துகின்றோமா என்பதைக் கணித்துச் செயல் பட வேண்டும்.

Anonymous said...

எந்த ஆதாரத்தை வைத்து எழுதியுள்ளீர்கள் ?

கேபி யின் துரோகத்தை மறைப்பதற்காக ஒரு புருடாவா ?

நீங்களுமா ?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...