Sunday 20 June 2010
ஜப்பானிய யசூசி அகாசியும் மனிதாபிமானமும்
2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது.
காக்கும் பொறுப்பு - Responsibility to Protect (R2P)
11-04-2009இலன்று காக்கும் பொறுப்பிற்கான சர்வ தேச அமைப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு ஒரு திறந்த மடலை அனுப்பினர். அதில் Jan Egeland, Gareth Evans, Juan Méndez, Mohamed Sahnoun, Monica Serrano, Ramesh Thakur and Thomas G. Weiss, ஆகியோர் கையொப்பமிட்டு வன்னியில் மக்கள் பேரழிவைத் தடுக்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினர். ஐக்கிய நாடுகள் சபை அதைச் செய்யத் தவறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அதிகாரியும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தருமான கிறிஸ் பற்றேண் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைத் தமிழர்கள் கொல்லப் பட்டபோது எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
11-04-2009 இலன்று சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச் நெருக்கடி குழு, காக்கும் பொறுப்பிற்கான சர்வதேச அமைப்பு ஆகியன ஜப்பானியப் பிரதமருக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் மனிதப் பேரழிவை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு என்ற வகையில் தடுக்கும்படி வேண்டின. இந்தக் குழுக்கள் ஏன் ஜப்பானுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். இலங்கையில் நடக்கும் இனக்கொலைக்கு ஜப்பானின் ஆசி இருந்தமையால்தான் அவை எழுதியிருக்க வேண்டும்.
இப்போது இலங்கை சென்ற ஜப்பானின் யசூசி அகாசி இலங்கை அரசின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலபோல் பேசியுள்ளார். அவரது பேச்சை ரம்புக்வெலதான் எழுதிக் கொடுத்தாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் தலையிடக்கூடாது என்று அவர் யசூசி அகாசி கூறியுள்ளார்.
தகடு கொடுத்த இலங்கை இந்திய அரசுகள்
இலங்கை தனது மக்களில் கணிசமான தொகையினரை கொன்றுள்ளது. கணிசமான மக்களை வீட்டற்றோர் ஆக்கியுள்ளது. கணிசமான மக்களை இன்றும் வசதிகள் குறைந்த முகாம்களில் வைத்துள்ளது. ஒரு அரசு தனது மக்களுக்கு உணவு உறைவிடம் உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பெறும் நிலை ஏற்பட உறுதி செய்ய வேண்டும். ஆனால் இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் வீடுகளை இழந்த மக்களுக்கு சில தகரங்களைக் கொடுத்து உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. ஏதிலியான தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று கோத்தபாய ரஜபக்ச பகிரங்கமாகக் கூறிவிட்டார். . அநியாயமாக கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் போர்குற்றம் நடந்ததாகக் கூறுபவர்கள் தேசத் துரோகிகள் அவர்கள் தூக்கில் இடப் படுவார்கள் என ஜெனரல் சரத் பொன்சேக்காவால் அலுகோசு என வர்ணிக்கப் படும் கோத்தபாய ராஜப்க்ச கூறியுள்ளார். இது இலங்கை அரசு தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு தோல்வியடைந்த அரசு என்பதை உறுதியாகக் காட்டுகிறது. இந்நிலையில் காக்கும் பொறுப்பு எண்ணக் கருவின் அடிப்படையில் இலங்கையில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கிறது. எப்படி இந்த யசூசி அகாசியால் இலங்கையில் ஐநா தலையிட முடியாது என்று சொல்லமுடியும். உயிருடன் நண்டை பச்சையாக துடிக்கத் துடிக்கச் சாப்பிடும் ஒருவரால்தான் இப்படி மனிதாபிமானம் அற்ற வகையில் பேச முடியும். பௌத்தத்தின் மனிதாபிமானத்திற்கு என்ன நடந்தது?
ஐநாவின் உயர் அதிகாரி பிலிப் அல்ஸ்டனின் இலங்கப் பயணத்தின் போது இலங்கைக்கு ஏற்படும் அபகீர்த்தியை ஈடு செய்யத்தான் யசூசி அகாசி இலங்கை வந்தாரா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment