Saturday, 10 April 2010

iPadஇல் தொழில் நுட்பக் கோளாறு


பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்தப் பட்டTablet computer வகையைச் சேர்ந்த iPad முதல் நாளில் மூன்று இலட்சம் விற்பனை செய்து சாதனை படைத்தது. ஆனால் வாங்கியவர்களிச் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். iPad இன் wi-fi சமிக்ஞைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அவர்கள் குறை சொல்லுகின்றனர். wi-fi signalதான் கணனியை வலைத் தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது. இதனால் iPad வாங்கியவர்கள் தாங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த மீண்டும் மீண்டும் கடவுச் சொற்களை கொடுத்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதாகச் சொன்கின்றனர்.

New owners posted comments on Apple forums saying that their iPad had little or no wi-fi signal, where other devices worked fine.

iPadஇன் இந்தப் பிரச்சனை வன்பொருள் (Hardware) சார்ந்ததாக இருப்பதால் இதை இலகுவில் சீர் செய்துவிட முடியாது.

Mike Arrington, founder and editor of the TechCrunch blog, posted: “My understanding of wi-fi issues on devices, particularly cramped devices like the MacBook Air and iPad, is that it’s usually a hardware/design issue and something that can’t be fixed via a software patch.”

ஏற்கனவே iPad இல் ஒளிப்பதிவுக் கருவிகள்(built-in camera) இல்லை என்றும் Flash வகை காணொளிகள் பார்க்கும் வசதிகள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இபோது பல மடிக் கணனிகள் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப் பட்டனவையாகவே இருக்கின்றன. அரட்டை அடிப்போரும் இணையத் தொலைபேசிகளைப் பாவிப்போரும் இந்த ஒளிப்பதிவுக் கருவிகளைப் பாவிக்கின்றனர்.

இவை தொடர்பாக iPad தயாரிப்பாளர்களான ஆப்பிள் நிறுவனம் இதுவரை கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை

“Casa de Trevino” from California said: “Having same problem with wi-fi being weak and constantly fluctuating. I have to keep entering my password to regain access to my network after having lost a signal. Two iPhones and two MacBooks showing full signal with no interrupts. Certainly hope this is fixable. Too pricey of a toy for it to have this issue right out of box.”

இத்தனைக்கும் மத்தியிலும் iPadஇன் விற்பனை பெருகிக்கொண்டே இருக்கிறது. நாளொன்றுக்கு மூன்று இலட்சம் விற்பனையில் தொடங்கியது நாளொன்றிற்கு ஏழு இலட்சம் வரை செல்லும் என்றும் எதிர்வு கூறப் படுகிறது.

இம்மாத இறுதியில் iPad பிரித்தானியாவில் சந்தைப்படுத்தப்படவிருக்கிறது.

iPadஐ அடித்து நொறுக்குவது போல் ஒரு காணொளி யூரியுப்பில் வெளிவிடப்பட்டு அது மில்லியன் கணக்கானோரால் பார்வையிடப் பட்டது. இது ஒரு விளம்பர உத்தியா என்றும் சந்தேகிக்கப் பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...