Friday, 9 April 2010

சட்டீஸ்கர் - நக்சலைட் தாக்குதலின் தாற்பரியம்.



இந்திய வரலாற்றில் நக்சலைட்டுக்கள் ஒரு மிகப் பெரிய தாக்குதலை 06-04-2010இலன்று சட்டீஸ்கரில் நடாத்தியுள்ளனர். நக்சலைட்டைப் பொறுத்தவரை இது ஒரு வெற்றீகரமான தாக்குதலாகும். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனரங்கன், விஜயகுமார், சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.

சட்டீஸ்கரின் தென் பகுதியில் தன்தேவடா மாவட்டத்தில் வளம் கொழிக்கும் சுரங்கங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 3 நாட்களாக அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கவச வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
06-04-2010இலன்று அதிகாலை 6 மணியளவில் அவர்கள் முக்ரனா என்ற அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கவச வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கண்ணிவெடி மூலம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் தூள், தூளாக நொறுங்கியது.

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமான இடத்தை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மலை உச்சியில் பாறைகளுக்கு பின்புறம் பதுங்கி இருந்து கொண்டு சரமாரியாக சுட்டனர். ஆனால் போலீஸ் காரர்களுக்கு பதுங்கு குழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாவோயிஸ்டுகள் மிக எளிதாக அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய ஆறு மாநிலங்களிலும் மிகப் பலமாக உள்ளனர்.

இத்தாக்குதலின் தாற்பரியங்கள்:

1. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் திட்டமிடும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
2. தங்களால் பெரிய அளவில் படைகளை நகர்த்த முடியும் என்று புலப்படுத்தியுள்ளனர். முதல்முறையாக ஒரு தாக்குதலில் அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமது போராளிகளைப் பாவித்துள்ளனர்.
3. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தங்கள் உளவுத் தகவல் திரட்டும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் படையினரின் வருகையை அவர்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்துள்ளனர்.
4. இந்திய உள்ளக உளவுத் துறையின் பலவீனம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆயிரக் கணக்கில் ஆயுதங்கள் சகிதம் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் படை நகர்த்தியதை இந்தியக் உளவுத் துறையினரால் அறிய முடியாமல் போனது.
5. மாவோயிஸ்டு தீவிரவாதிகளிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் படை நகர்த்தும் போது ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் அவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...