
சீனாவின் கிராமப் புறங்களில் நடந்த ஆயுதக் கிளர்ச்சிகளை அடக்க சீனா வகுத்த உத்திகளில் முக்கியமானவை அங்கு பாரிய பெருந்தெரு வலையமைப்பை உருவாக்கியமையாகும். பாரிய பெருந்தெருக்கள் உள்ள இடங்கள் கரந்தடி (கொரில்லா) சண்டை செய்வோர்க்கு பாதகமான சூழலை சீனாவில் ஏற்படுத்தியது. அரச படைகள் தமது போக்கு வரத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். இதனால் கரந்தடிப் படைக்குழுக்கள் பரந்து செயற்படவேண்டிய சூழலை உருவாக்கும். அரச படைகளின் தொகையுடன் ஓப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலான ஆளணிகளைக் கொண்ட கரந்தடி படையினருக்கு இது மிகவும் சாதகமாக அமையும். இந்தியாவின் தெருவசதிகளற்ற கிராமப் புறங்களில் மாவோயிசத் தீவிரவாதிகள் பல தாக்குதல்களை வெற்றீகரமாக அண்மையில் செய்து முடித்ததும் கவனிக்கத் தக்கது.
சீனா தனது பெருந்தெருக் கட்டமைப்பு உத்தி ஆலோசனையை இலங்கைக்கு வழங்கி அதற்கான உதவிகளையும் செய்கிறது. சீனாவிற்கு இதற்கான பிரதி பலன் என்ன? வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஊழியர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் பல சீன உளவாளிகளும் படையினரும் ஊருடுவ முடியும். இது இலங்கையில் தெரு அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா இந்தியாவை நோக்கித் திறக்கும் ஒரு படைத்துறைப் பாதை என்பதைத் தவிர வேறு எதாக இருக்க முடியும்? சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் பலவீனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் பலவீனம் என்பது தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்பதுதான். அதற்காக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியப் பிராந்திய நலன்களையும் பலியிடத் தயாராக உள்ளனர். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இப்போதைய முக்கிய செய்றதிட்டம் தமிழ்த் தேசிய போராட்டத்தை முற்றாக ஒழிப்பதும் அது மீண்டும் தலை தூக்க்காமல் செய்வதுமாகும். இந்தியாவை ஏமாற்ற சில வசதிகளை இந்தியாவிற்கு இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதை வைத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை இந்தியாவையும் சீனாவையும் சமமாக நடத்துகிறது என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். இலங்கையில் சீனாவையும் அனுமதித்து இந்தியாவையும் அனுமதித்தால் அது சமமாக நடத்துவதாகத்தான் தெரிகிறது. இலங்கையில் இந்திய இருப்பால் சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப் போவதில்லை. ஆனால் இலங்கயில் சீனாவின் இருப்பு இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தல் என்பது உண்மை. அம்பாந்த்தேட்டைத் துறைமுகமும் அங்குள்ள சீன ஆயுதக் கிடங்கும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய "நிபுணர்கள்" பிதற்றுகின்றனர். வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சீனர்கள் இந்தியாவிற்கு மிக அண்மையில் வந்து விட்டனர்.
No comments:
Post a Comment