Monday, 15 March 2010
என் காதலியும் கலைஞர் தொலைக் காட்சியும்
அரும்பும் என் காதலுக்கு
அன்பு வாழ்துச் சொல் என்றேன்
இரும்பாகிப் போனாள்.
அழகிய தமிழ்மகள்
என்று ஆசை கொண்டேன்
இளகிய மனமின்றிப் போனாள்.
விழியில் மானாடுது
இடையில் மயிலாடுது என்றேன்
"எலிமினேற்" செய்துவிட்டாள்
பார்த்ததும் பாட்டுக்குப் பாட்டாக
பாடிப் பாடி நின்றேன்
பார்காதது போல் போனாள்.
விசாரணை செய்தேன்
வானம்பாடியாவோமா என
போடா பயலே என்றாள்.
மங்கையவள் உலகத்தில்
இரசிகனாய் நின்றேன்
கொதிக்க வைத்துப் போனாள்
பார்த்தால் தில் தில்
மனதில் என்றேன்
செல் செல் என்று போனாள்.
சிரிப்பு வருகுது
பார்ததும் என்றேன்
செருப்பு வருமென்றாள்.
உன் நாளைய இயக்குனர்
நான் என்றேன்
மயங்கவைத்துச் சென்றாள்.
விடியலே வா - என்
மடியிலே வா என்றேன்
தடியனே போ என்றாள்
அவள் ஒரு மின்சாரம்
எனக்கென்றேன்
அதிர்ச்சி தந்தாள்.
நீ தேனும் பாலும் போல்
சுவையோ சுவையென்றேன்
எல்லாமெ சிரிப்பென்றாள்
என் இதயத்தில் அவள்
திரைத் துளியென்றேன்
வைர மங்கையானாள்
உறவுக்குக் கை கொடுப்போம்
மஹா இலட்சுமியே என்றேன்
சதி செய்தாள் லீலாவதி.
விளக்கு வைக்கும் நேரத்தில்
நீ என் அபிராமி என்றேன்
விளக்குமாறே என்றாள்
லாஜிக் இல்லா மஜிக்
அவள் பார்வையென்றேன்
கருத்து யுத்தம் செய்தாள்
தங்கமான புருசன்
நான் என்றேன்
உரசாமற் போனாள்.
என் குடும்பம் என்றும்
உனக்கென்றேன்
வாடகைவீடு பார் என்றாள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
very amateurish.
Post a Comment