Monday, 15 March 2010

ஐபோனில் இசை அமைக்கலாம்


ஐபோனைப் பாவித்து ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார் சீனப் பொப் பாடகியான பிக்ஸி ரீ என்பவர். ஐபோனில் உள்ள ஒலிகளை(bleeps, thuds and strums) பாவித்து ஸ்ஹங் சுஅன்யன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்தப் பாடகி இந்த இசை அமைப்பைச் செய்துள்ளார். Drum- Meister, Bassist, iDrum, NlogSynthesizer, NESynth and iShred ஆகிய செயற்படு மென் பொருள்கள் இந்த இசையமைப்புக்கு இவரால் பாவிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு இசைத் தட்டு நிறுவனத்தின் விளம்பர உத்தி என்று சந்தேகமும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைச் சாமானியர்களால் செய்ய முடியாது விற்பன்னர்களால் மட்டும்தான் செய்ய முடியும் என்று குறையும் கூறப்பட்டுள்ளது.

ஒரு மணித்தியாலத்தில் 25,000 ஐபாட்(Ipad) விற்பனை.
பிக்ஸி ரீயின் இரசிகர்கள் இவரை அப்பிள் நிறுவனம் தனது விளம்பரத்திற்கு பயன்படுத்த் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அப்பிள் நிறுவனம் தனது ஐபாட் விற்பனையில் வெகு இலாபம் ஈட்டிவருகிறது. ஒரு மணித்தியாலத்திற்கு 25,000 ஐபாட்டை அப்பிள் நிறுவனம் விற்று வருகிறது. ஐபாட் இப்போது அமெரிக்காவில் அமோகமாக் விற்பனையாகி வருகிறது. விரைவில் இது பிரித்தானியாவில் 545 பவுண்டுகளுக்கு விற்கப்படவிருக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...