Wednesday, 27 January 2010
தோல்வியை ஏற்க மறுக்கும் சரத் பொன்சேக்கா.
இலங்கைத் தேர்தலின் முடிவுகளை தான் ஏற்க மறுப்பதாக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு தாம் சவால் விடுப்பதாகவும் அறிவித்துள்ளார். அவரது சவால் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாடளாவிய மக்கள் எழுச்சிப் போராட்டமா அல்லது சட்டரீதியாக நீதிமன்றில் நடவடிக்கையா அலலது இரண்டும் கலந்ததா?
தேர்தல் முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையாளர் இப்படிக் குறிப்பிட்டார்: இது வழமையான அறிக்கையே தவிர எந்த சட்டவமைப்பிற்கும் உட்படாதது. இந்தச் சொற்றொடரின் தாற்பரியம் என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேவேளை இலங்கைத் தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் உறுதிப் படுத்தப் படாத செய்திகள் முன்பு தெரிவித்தன . தேர்தல் வாக்குக்கள் எண்ணப் படும் இடங்களில் அரச சார்பு ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதிகளை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல எதிர்க் கட்சிப் பிரமுகர்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லமல் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. தடுத்து வைத்திருக்கப் பட்ட ரணில் விகிரமசிங்கே அமெரிக்கத் தலையீட்டால் விடுவிக்கப் பட்டார்.
நேற்று வாக்கு எண்ணிக்கை ஆரமபித்ததில் இருந்தே பல மின்ன்ணு ஊடகங்கள் மூடப் பட்டுவிட்டன.
வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையாளர் வீட்டுக் காவலில் என்றால் தேர்தல் வாக்கு எண்ணிக்ககைகளை நெறிப்படுத்துவது யார்?
இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.
டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவிக்கிறது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.
The spokesperson for the Centre for Monitoring Election Violence Dr. Pakiasothy Saravanamuttu raised concerns over the incidents in a letter to the Elections Commissioner.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment