Thursday 28 January 2010

சரத்தைப் பாதுகாக்க இந்தியாவிடம் மன்றாடிய ரணில்


தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட எதிர் கட்சியினர் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஒரு உல்லாச விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டாடலாம் என ஒன்று கூடினர். அவர்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களை இலங்கை இராணுவம் சூழ்ந்து கொண்டது.

அமெரிக்கத் தலையீட்டால் முதலில் ரணில் விக்கிரமசிங்க விடுவிக்கப் பட்டார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் படைத்துறைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ந்தும் அங்கு "இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தார்.

நாட்டை "பயங்கரவாதிகளிடம்" இருந்து பாதுகாத்தவர் தன் பாதுகாப்பிற்காக கவலைப்படும் நிலை. சட்டரீதியாக தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி தேர்தல் ஆணையாளரை சரத் பொன்சேக்கா தொடர்பு கொண்டு வேண்டினார். தன்னை ஒரு நட்பான அயல் நாடு ஒன்றிற்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி வேண்டிக் கொண்டார். தேர்தல் ஆணையாளர் ஐயோ சாமி ஆளை விடுங்கோ என்றார். தேர்தல் என்று முடியும் என்று வீடு செல்வேன் என்று காத்திருந்தார் ஆணையாளர். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

சரத்தை விடுவிக்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சி கைகூடாமல் போகவே சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க சண்டைக் காரன் காலில் விழுவது மேல் என்று உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் அவர் வீடுசெல்ல அனுமதிக்கப் பட்டார்.

சரத் பொன்சேக்காவையும் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று அறியப்படுகிறது. சரத் பொன்சேக்கா வெளிநாடு சென்றால் அவர் இலங்கையில் நடந்த போர்குற்றங்களுக்கு ஒரு சாட்சியாவாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...