Tuesday, 14 July 2009

கார்த்திகைப் பூவுக்குள் வல்லாதிக்க வெறியர்களின் பூகம்பம்.


இணைத்தறுதலை நாடுகளின் மௌனம்.

நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்.
இவையாவும் ஒன்று கூடி ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூட்டங்கள் நடாத்தின அறிக்கைகள் விட்டன. தமக்குத் தாமே இணைத் தலைமை நாடுகள் என்று பெயரும் சூடிக் கொண்டன. தமிழ்த்தேசியத்தின் ஆயுத பலத்தை மழுங்கடிக்கும் வரை இவர்கள் மிக அக்கறையுடன் செயற்பட்டனர். இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்? முன்னூறு ஆயிரம் தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இவர்கள் கூடிக் கதைக்காதது ஏன்? அமெரிக்கக் கோலா பானத்தையும் கோழி வறுவலையும் ருசித்துக் கொண்டு ஜப்பானிய ஒலிப் பேழையில் பிரித்தானியப் பாடல்களைத் தமிழர்கள் கேட்கும் நாளிற்காக இவர்கள் காத்திருக்கின்றனர். அந்த நாள் வரும் வரை என்ன சதிகளை இவர்கள் செய்வார்கள்?

சீறும் சீனா
முத்து மாலைத் திட்டம் என்ற இந்தியாவிற்கு எதிரான சீனாவின்சுருக்குக் கயிறு பர்மா, பங்களாதேசம், இலங்கை,பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் அமைக்கும் கடற்படைத் தளங்களைக் கொண்டது. இத் தளங்களில் முக்கியமான பகுதி இலங்கை ஆகும். இது வரை சிங்களப் பிரதேசங்களில் மட்டும் கண் வைத்திருந்த சீனா தமிழ்த்தேசியம் பலவீனமடைந்த நிலையில் தமிழர் பிரதேசங்களிலும் தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. வடக்கின் அபிவிருத்திக்கு சீன வங்கி உதவ முன் வந்துள்ளதின் பின்னணி என்ன? வடக்கில் சிங்கள இராணுவத்தினரை குடும்ப சமேதராகக் குடியேற்றி தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கவா?

பாரதத்தின் பாதகம்.
13-ம் திருத்தம் என்ற உருப்படாத திட்டத்தை குடுகுடுப்பையாக வைத்துக்கொண்டு நல்ல காலம் வருகுது தமிழர்களுக்கு நல்ல காலம் வருகுது என்று கதறிக் கொண்டிருக்குது பாரத பூமி. இலங்கையில் சீனா தின்று துப்பிய எச்சங்களைச் சுவைக்கக் காத்திருக்கிறதா பாரத தேசம்?

இவர்கள் எல்லாரும் இணைத்து தமிழர்களின் பிரேதங்களில் நடனமாடுகின்றனரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...