Thursday, 12 March 2009

மேலும் பல இந்தியப் படையினர் ஈழத்திற்கு செல்வார்களா?


பின்நகர்வு என்பது பின்னடைவு அல்ல
சென்ற வார இறுதியில் இன்னும் ஒரு வாரத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஐந்து நாட்கள் சென்றுவிட்டன. இதற்கிடையில் 10-ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறு குழுவாகச் சென்ற விடுதலைப் புலிகள் விசுவமடுவில் பாரிய ஆயுத சேதத்தை இலங்கைப் படையினருக்கு ஏற்படுத்திவிட்டு திரும்பி விட்டனர். யுத்தத்தில் பின்நகர்வு என்பது புலிகளைப் பொறுத்தவரை பின்னடைவு அல்ல என்று மீண்டும் நிரூபித்து விட்டனர். எந்த ஒரு விடுதலைப் புலிகளின் முகாமைச் சுற்றி வளைத்து தாக்கியளித்ததாக கடந்த இரு ஆண்டுகளில் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அண்மைக் காலங்களில் நான்கு தடவை இலங்கை இராணுவம் பாரிய ஆயுத இழப்பைச் சந்தித்துள்ளது.

தமிழ் நாட்டுக்கு வாய்ப் பூட்டு?
லோக் சபா தேர்தலுக்கு முன் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டுமென்பது சோனியா - மேனன் அதிகார மையத்தின் திட்டமென்று பலராலும் கருதப் படுகிறது. ஆனால் அது தற்போதைய கள நிலவரப் படி சாத்தியமாகாது என்பது உறுதியான கருத்தாகும். தற்போது 6000 இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களாலும் இலங்கைப் படையினராலும் பாரிய அழிவை புலிகளுக்கு ஏற்படுத்த முடியவில்லை. தேர்தலுக்கு முன் புலிகளை ஒழிப்பதற்கு மேலும் இந்தியப் படைகள் இலங்கைக்கு செல்லவேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டில் சோனியாவின் காங்கிரசிற்கு தேர்தலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன் ஏற்படாக தேர்தலில் ஈழப்பிரச்சினைக்கு வாய்ப்பூட்டு போடப்படும். தேர்தல் ஆணையகமும் இது தொடர்பாக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதாவது தேர்தலில் ஈழப் பிரச்சனை தொடர்பாக பேசுதல் சுவரொட்டி ஒட்டுதல் போன்றவை தடை செய்யப் பட்டுள்ளது. இது சோனியா-மேனன் அதிகார மையம் ஈழத்தமிழர் தொடர்பாக மேலும் மோசாமான முடிவுகளை எடுக்கவிருப்பதையே காட்டுகிறது. படை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக மருத்துவக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது இவர்கள் காயமடைந்த தமிழர்களுக்கு உதவுவது என்ற போர்வையில் வந்து கட்டுக்கு அடங்காத அளவில் காயப் பட்ட இலங்கை இராணுவத்திற்கு உதவுவதோடு காயமடைந்த தமிழர்களிடமிருந்து உளவுத்தகவல்களையும் திரட்டலாம். ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவர்களில் பலர் இனி வரும் வாரங்களில் கைது செய்யப் படலாம்.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

//ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.//
ஆம்............................................................

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...