
ஜோன் ஹோல்ம்ஸ்
இலங்கைப் போரில் இறந்தவர்களின் தொகை தன்னிடம் இருந்தும் அதை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது. Inner City Press கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே இந்த உண்மை வெளிவந்துள்ளது. ஐநாவின் நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் பொதுமக்கள் இறப்பு தொடர்பாக ஐநா சொந்தமாக செய்த முயற்சியில் ஒரு கணிப்பை எடுத்துள்ளதாகவும் அது உறுதிப்படுத்தப்படாமையால் அதி வெளியிட முடியாதென்றும் கூறினார்.
வதை முகாம்கள்
இலங்கை அரசு இடைத்தங்கல் முகாம் என்ற போர்வையில் நாடாத்தும் வதை முகாம்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டபோது அம் முகாம்களுக்கு தாம் நிதி உதவி செய்வதையும் நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளார். பன்னாட்டு நியமங்களுக்கு ஏற்ப இல்லாத முகாம்களுக்கு தம்மால் தொடர்ந்து உதவி செய்யமுடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐநாவின் முரண்பட்ட நிலை
Inner City Press ஐநா பொதுமக்கள் கொலை தொடர்பாக சூடானில் எடுக்கும் நடவடிக்கைகும் இலங்கையில் எடுக்கும் நடவடிக்கைகும் முரண்பட்ட நிலை காணப் ப்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment