Saturday, 14 March 2009

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சரணடைந்தது. ரூபா பாரிய வீழ்ச்சியடையும்.


சர்வ தேச நாணயத்தின் நிபந்தனைகளுக்கு பணியமுடியாது என்று வீராப்பு பேசிவந்த இலங்கை அரசு இறுதியில் நிதியத்தின் நிபந்தனைகளுக்கு பணிந்தது.

பிழையான நிதி முகாமைத்துவம்
நிதியமைச்சராகவும் பணிபுரியும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தனது தவறான நிதி முகாமைத்துவத்தால் இலங்கையின் நிதி நிலைமையை அரச ஊழியர்களுக்குக் கூட ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரச ஆவண விற்பனை மூலம் திரட்ட முயன்றபோது ஒரு மில்லியன் மட்டுமே திரட்ட முடிந்தது. தனியார் வங்கிக் கடன் பெற முயன்றபோது வங்கிகள் மிக அதிக வட்டி கேட்டதால் அம் முயற்சியையும் கைவிட்ட இலங்கை அரசு சர்வ தேச நாணய நிதியத்தை நாடியது.

கடும் நிபந்தனைகள் விதிக்கும் சர்வ தேச நாணய நிதியம்
சர்வ தேச நாணய நிதியம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு பல நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளைத் தணிக்க இலங்கை எடுத்த பலத்த முயற்ச்சி படு தோல்வியை அடைந்துள்ளது. இதனால் இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு விரைவில் குறைக்கப்படும். அரசின் பல சமூக நலன் திட்டங்கள் கைவிடப்படலாம். இது மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கைக் குறைக்கும்.

மேலும் பல பொருளாதாரப் பிரச்சனைகள்
பல ஆடை உற்பத்தியாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறத் தொடங்கி விட்டார்கள். இதனால் பல ஆடைஉற்பத்தி ஆலைகள் மூடப் பட்டுள்ளன. இத்துடன் புலம் பெயரந்த தமிழ் மக்கள் இலங்கைப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கும் போராட்டத்தில் இறஙகியுள்ளனர். இதனால் மேலும் பல பொருளாதாரப் பிரச்சனைகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...