
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு
ஒவ்வொரு நீர்த் திவலையும் உனக்கு எமனாகும்
ஒவ்வொரு சிறு சுள்ளியும் உனக்கு கொள்ளியாகும்
ஒவ்வொரு மண்ணும் உனக்கு கண்ணி வெடியாகும்
ஒவ்வொரு அடியும் உனக்கெனி மரண அடியாகும்
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு
பொடிபடும் இனி உன் யுத்த தாங்கிகளெல்லாம்
அடி படும் இனி உன் யுத்த முனைப்பெல்லாம்
சுடு படும் இனி உன் வெற்றிக் களிப்பெல்லாம்
மண் படும் இனி உன் எந்திரப் பறவைகளெல்லாம்
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு
பாயும் பார் தமிழர் படையிங்கு
ஓயும் பார் உன் எக்காளமிங்கு
சாயும் பார் உன் கூலிப் படையிங்கு
நாறும் பார் உன் போலி வீரமிங்கு
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு
No comments:
Post a Comment