
திருச்செந்தூர் முத்துக்குமரா
ஈழத்தில் ஆரியப்பேய்கள் போடும்
கோலத்தைக் கண்டு கொதித்தாயோ
உன் உடலதை தீயில் குளிப்பாட்டினாயோ
சுவர் உரசி உன் உடல் நொந்தால்
துடிக்கும் உனைப் பெற்ற தாய்
தீப்பொசுங்கி நீ வெந்ததால்
எப்படித்தான் துடிதுடித்தாளோ
உன் தமிழ்ச் செந்நீர்த் துடிப்பை
நாமெல்லாம் நன்குணர்ந்தோம்
ஆனாலும் உரிமைக்கு உயிர்கொடுக்க
பல வழிகள் காட்டிய பெரியோரை
மறந்தது ஏன் என் கண்ணா
தந்தை பெரியாரை போதனையை
ஏன் மறந்தாய் என் ஐயா!
No comments:
Post a Comment