தேர்தலுக்குப் பின் போர் குற்றச் சாட்டுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக இரு முக்கிய அம்சங்கள் இப்போது நிலுவையில் உள்ளது. ஒன்று அமெரிக்க அரச திணைக்களத்தால் முன்வைக்கப் பட்டது. அடுத்தது ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப் பட்டது. இவற்றை வெறுமனே அறிக்கைகளுடன் சமாளித்து விடமுடியாது. மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் இதை தொடர்ந்து வலியுறுத்தும். அது கூறுவது:
- கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் மஹிந்த ராஜபக்சேயையும் கோத்தபாய ராஜபக்சேயையும் குற்றவாளியாக்கிப் பழிவாங்குவார்.
மஹிந்த வெற்றி பெற்றால் சரத் பொன்சேக்கா மீது போர்குற்றம் சுமத்திப் பழிவாங்குவார்.
No comments:
Post a Comment