Wednesday 30 December 2009

தன்னைக் கேவலப் படுத்திய tamilwin.com


யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவில் ஈடுபடுபவர்களுக்கு மாணவர் அமைப்பு எச்சரிக்கை என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டது. அச்செய்தியின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கல்லூரியின் மீது சேறு பூசப்பட்டுள்ளது. தமிழ்வின் அச்செய்தியை இன்னும் ஒரு இணையத் தளத்தில் இருந்து பெற்று பிரசுரித்துள்ளது.

அனாமதேய இணையத் தளம்.
அந்த இணையத் தளம் ஒரு ஆசிரியரைத் தாக்கி எழுதுவதற்காக மட்டும் உருவாக்கப் பட்டது. அந்த இணையத் தளத்தில் அந்த ஆசிரியரைத் தாக்கி எழுதுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த இணையத் தளத்தின் உரிமையாளர் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லாமல் மறைக்கப் பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இணையத் தளம் அந்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்துவதற்கென்றே உருவாக்கப் பட்டது.

முன்பு ஒரு ஆசிரியர்மீது அவதூறு சுமத்துவதாயின் ஒரு வெண்கட்டி(Chalk) எடுத்து சுவரில் எழுது விடுவார்கள். இப்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. ஒரு வர்ண துண்டுப் பிரசுரத்தையே அச்சிட்டு எவராலும் வெளியிடலாம். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஒரு இணையத் தளத்தையே ஆரம்பித்து அவதூறாக செய்திகள் வெளியிடலாம்.

அதில் குறிப்பிடப் பட்டுள்ள கல்லூரி குடாநாட்டின் முதன்மைக் கலவன் கல்லூரி.
அந்தக்கல்லூரியின் பெருமைக்கு அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளே சான்று. அக்கல்லூரியில் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் மாணவர்கள் சேர விண்ணப்பிகிறார்கள். அந்தக் கல்லூரி ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. அது ஒரு கலாச்சாரச் சின்னம். அந்தக் கல்லூரிக்கும் கலாச்சார சீரழிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு அனாமதேய இணையத் தளத்தில் வெளிவந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து tamilwin.com தன்னைத் தானே கேவலப் படுத்தியுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...