Monday, 28 December 2009

சிவாஜிலிங்கப் புதிர்களும் சந்தேகங்களும்.


புதிர் - 1 சிவாஜிலிங்கம் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழ்த் தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளர் எனக் கருதப்படுவர் சிவாஜிலிங்கம். இலங்கைப் பாராளமன்றத்திற்குள் வைத்தே சிங்கள பாராளமன்ற உறுப்பினர்களால் தாக்கப் பட்டவர். இவர் ஏன் தேர்தலில் போட்டியிருகிறார்?
அவர் கூறும் காரணம்:
தமிழர்களால் பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது, ராஜபக்சேவையும் ஆதரிக்க முடியாது. எனவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.

புதிர் -2 ரெலோ இயக்கத்தில் இருக்கிறாரா சிவாஜிலிங்கம்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)விலிருந்து நாடாளுமன்ற உறுப்பபினர்களாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.கே.ஸ்ரீகாந்தா ஆகியோர் விலகியுள்ளனர். இதற்கான பதவிவிலகல் கடிதங்களை அவர்கள் இருவரும் சமர்ப்பித்துள்ளனர் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் ரெலோவின் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது எனினும் இக்கூட்டத்தில் வைத்து குறித்த இருவரும் தமது பதவிவிலகல் கடிதங்களை கையளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தகவலை சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார்.

புதிர் - 3 விகிரம்பாகு கருணரட்ணவுடன் சிவாஜி இணைந்துள்ளார்.
புதிய இடதுசாரி முன்னணியின் அரசதலைவர் வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ணவும், சுயேட்சை வேட்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கமும் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து விக்ரமபாகு கருணாரத்னவிடம் வினவியபோது, இருவரும் போரிற்கு எதிரானவர்கள் என்பதுடன் இருவரும் இடதுசாரிகள் என்றும் அத்துடன் தாம் இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானவை எனவும் இருவரும் வடக்கு கிழக்கில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே தேர்தலில் போட்டியிடும் இரு வேறு வேறு வேட்பாளர்கள் ஒன்றாக செயற்படுவது வேறு எங்காவது நடந்துள்ளதா?

யார் இந்த சிவாஜிலிங்கம்?
தங்கத்துரை-குட்டிமணி காலத்தில் இருந்தே தன்னை தமிழின விடுதலையில் ஈடுபடுத்திக் கொண்டவர் சிவாஜிலிங்கம். தமிழ் காங்கிரசுக் கட்சியில் இருந்த மோதிலால் நேடு என்பவருடைய மருமகன் சிவாஜிலிங்கம். இவருக்கும் மாமனாருக்கும் பலத்த கொள்கை வேறுபாடு ஆரம்பத்திலேயே ஏற்பட்டுவிட்டது.
சிவாஜிலிங்கம் சார்ந்த ரெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த முரண்பாடு இருந்த வேளையிலும் பிரபாகரனுக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. இப்போது இருக்கும் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களிடையே உணர்ச்சி மிக்க உரைகளை நிகழ்த்துபவர் சிவாஜிலிங்கம். இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கிற்கு 40,000 சிங்களப் பிணங்கள் அனுப்பப் படும் என்று பாராளமன்றத்தில் உரைநிகழ்த்தியவர் சிவாஜிலிங்கம். இவர் வெளிநாடுகளில் செய்த பல உரைகளிற்காக இவர் இலங்கை சென்றதும் கைது செய்யப் படுவார் என்று பேசப் பட்டது.

தமிழர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கையில் ஜனவரி 26-ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவேண்டும் அல்லது தானே போட்டியிடுவேன் என்று முதலில் சிவாஜி அறிவித்தார். அவரது அந்த நிலைப்பாட்டிற்கு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் (இவர் இலங்கை திரும்ப முடியாமல் வெளிநாட்டில் தங்கியுள்ளார்) ஆதரவு தெரிவித்தார். பின்னர் விலகிக்கொண்டார். சிவாஜி தனது நிலைப்பட்டை மற்றப் பாராளமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லியோ அல்லது கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லாமல் திடீரென ஏன் அறிவித்தார்? இப்படி ஒரு முடிவை எடுத்த பின்னர்தான் அவர் இலங்கை திரும்பினாரா? தேர்தலில் போட்டியிடும் முடிவை சிவாஜிலிங்கம் அறிவித்த பின்னர் அவர் இந்தியாவின் சொற்படியே மஹிந்த ராஜபக்சவை வெல்லவைக்கவே அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற குற்றச் சாட்டு அவர்மீது சுமத்தப் பட்டது. இதற்கு முன்னர் பலதடவை சிவாஜிலிங்கம் இந்தியா சென்று வந்துள்ளார். 2009 - மே மாதம் நடந்த இந்தியத் தேர்தலில் சிவாஜிலிங்கம் மறைமுகமாக பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவாஜிலிங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா இப்போது அவரை இந்தியாவிற்கு நுழையவிடாமல் தடுத்தது ஏன்? இது ஒரு நாடகமா? சிவாஜிலிங்கத்தின் மீது மதிப்புக் கூட்டும் நடவடிக்கையா?

3 comments:

எல்லாளன் said...

அப்படியான சந்தேகக் கண்ணோட்டமே எனக்கும் இருக்கின்றது
முதலில் தன்னை கொல்ல நினைக்கின்றார்கள் என்று சிவாஜி சொன்னார் அதன் மூலம் தன் மீது நம்பிக்கை ஏற்படுத்த
இதுவும் ஒரு இந்தியாவின் நாடகமே

பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் வைத்த செக் மேக் என்று ஒரு கட்டுரை வந்திருக்கின்றது.

மேலும் பல கட்டுரைகளும்

ஆட்சி மாற்றமும் முதல் எதிரிகளான மகிந்த -கோத்தபாய வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும்

இந்தியாவின் விருப்பு மகிந்த மீண்டும் வர வேண்டும் என்பதாகும் அதன் ஒரு துருப்புச் சீட்டுத்தான் சிவாஜிலிங்கம்

சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவது தமிழர்களுக்கு புதிய பாதைகளை திறந்து விடுவதற்கான சாத்தியங்களை உருவாக்கலாம் இல்லாவிட்டாலும் கூட

கடும் கொலைகாரப் போக்காளர்களான கோத்தபாய கூட்டத்தின் அதிகாரம் தூக்கப்படுவது இது அவர்களுக்குள் மோதுவதற்கும் வழிவகுக்கும்

மீண்டும் இவர்களே வந்தால் எந்த மாற்றமும் வருவதிற்கில்லை மாறாக முன்னிலும் கடுமையான கொலைகள் நிகழலாம்

எல்லாளன் said...

சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம்.

ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

pandiyan said...

கவிஞர் வேல் தர்மா.. வாக்களிக்க விரும்பவில்லை என்றால் இங்கு உள்ளது போன்று 49 'o' படிவம் இலங்கையில் உள்ளதா?..சிங்கள தேசத்திற்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அதில் எழுதி போடலாமே.. அதன் மூலம் சிங்கள தேசத்தை தமிழர்கள் நம்பவில்லை என்பது சர்வதேசத்திற்கு புலனாகும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...