Sunday, 27 December 2009

தமிழர்களது வாக்குகள் பாரிய அளவில் மோசடி செய்யப்படலாம்.


இலங்கையில் சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தொடர்ந்து நடந்த மாகாணசபைத் தேர்தலிலும் அளிக்கப் பட்ட வாக்குக்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் கட்சிகள் அடிப்படையில் வாக்கு வங்கிக் கணக்கு இப்படி இப்போது இப்போது இருப்பதாகக் கொள்ளலாம்:

சரத் பொன்சேக்காவை ஆதரிக்கும் கட்சிகள்
ஐக்கிய தேசியக் கட்சி.....................2,610,000 வாக்குகள்
ஜனதா விமுக்திப் பெரமுன........ 245,000 வாக்குகள்
மொத்தம் 3,855,000 வாக்குகள்

மஹிந்த கட்சி
மஹிந்த ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,800,000 வாக்குகள்.

போர் வெற்றியால் மஹிந்த சார்பாக திரும்பிய வாக்கு அலை சரத் பொன்சேக்காவின் வெளியேற்றத்தால் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது. அது மட்டுமல்ல சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ஜனதா விமுக்திப் பெரமுனையுடன் இணைந்து போட்டியிட்டார். அத்துடன் இப்போது பிளவு பட்டிருக்கும் முஸ்லிம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவும் மஹிந்தவிற்கு இருந்தது.

ஜனதா விமுக்திப் பெரமுனயின் தீவிர இடது சாரிக் கொள்கையுடையவர்கள் தமது கட்சி வலது சாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணந்து செயற்படுவதை விரும்பமாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஜனதா விமுக்திப் பெரமுன இணைவால் ஏற்படும் இணைவு வலு இதனால் செயலிழக்கிறது. இந்த இணைவால் பிரத்தியேக வாக்குக்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

கட்சி சார்பில்லாத பல மத்திய தர வாக்காளர்கள் அதிகரித்த வாழ்க்கைச் செலவினாலும் ஊழல் நிறைந்த நிர்வாகத்தாலும் விரக்தியடைந்திருப்பதால் அவர்கள் ஆளும் மஹிந்தவிற்கு எதிராக வாக்களிப்பர்.

கண்டிச் சிங்களவர்களின் வாக்குக்களை சரத் அணியில் இருந்து மஹிந்த அணிக்குத்தாவிய எஸ். பி திசாநாயக்கா தனது நாவன்மையால் இம்முறை வென்றெடுப்பாரா என்பது சந்தேகம்.

இதனால் சிங்கள மக்களின் வாக்குக்களில் சரத் பொன்சேக்காவிற்கு 42 இலட்சம் வாக்குக்களும் மஹிந்தவிற்கு 44 இலட்சம் வாக்குக்களும் கிடைக்கலாம். சிங்கள மக்களின் வாக்குகள் இப்படி விழுமாயின் தமிழர்கள் வாக்கு தீர்மானிக்கும் சக்தியாக அமையவிருக்கிறது. இதை இரு தரப்பும் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. இதனால்தான் சரத் பொன்சேக்கா தமிழர்களின் வாக்குகளைப் பெறுதவதில் அதிக அக்கறை காட்டுகிறார். அவர் தனது தமிழ் மக்களிற்கு சில வாக்குறுதிகளை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் முயற்ச்சியில் கவனமாக இறங்கியுள்ளார்.

மஹிந்த தனது காய்களை வேறு விதமாக நகர்த்துகிறார். அவர் மலையக மக்களைத் தன் பின்னே இந்தியா மூலமாக இழுத்துவிட்டார். பிள்ளையான், கருணா, டக்ளஸ், சித்தார்த்தன் போன்றோர் ஆட்சியில் இருக்கும் கட்சியையே என்றும் ஆதரிப்பர். அவர்கள் ஆதரவு மஹிந்தவிற்கே. இப்போது தமிழ்தேசிய உணர்வுள்ள தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பர் என்பதே பெரிய கேள்வி. தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முடிவு அவரகள் யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்று எடுக்க விருக்கும் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
அவர்கள் பாரிய அளவில் தேர்தலைப் புறக்கணிப்பர் என்பது இடம் பெயர்ந்து வாழும் மக்களில் பத்துப் பேரில் ஒருவரே வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர் என்பதில் இருந்து தெரிய வருகிறது. இப்படி இருக்கையில் ஒன்றில் தமிழர்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப் படுவர் அல்லது அவர்கள் வாக்குக்கள் மோசடி செய்யப் படும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...