Saturday, 28 November 2009

நீதிமன்றில் "சாகாத" பிரபாகரன்.


சென்னை தடா நிதிமன்றில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது அங்கு பிரபாகரனோ பொட்டு அம்மான் எனப் படும் சிவசங்கரோ இறந்து விட்டதாக அறிவிக்கப் படவில்லை. இருவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசின் சட்டமா அதிபர் திணைக்களம் கதிர்காமர் கொலைவழக்கில் கொழும்பு நீதிமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து நீக்கப் பட்டனர். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் வாய் மொழிமூலமான அறிக்கை மூலமாகவே இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தது. இருவரும் இறந்தமைக்கான இறப்புச் சாட்சிப் பத்திரம் இலங்கை அரசின் பதிவாளர் திணைக்களத்தில் பதியப் படவில்லை. ஆனால் இலங்கைச் சட்டத்தைப் பொறுத்தவரை Court law - நீதிச் சட்டப் படி இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு இருவரும் இறந்துவிட்டதாக இந்தியாவிற்கு இது வரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தியச் சட்டத்தில் ராஜீவ் காந்தி கொலைவழக்கை சித்திரபுத்திரனாரிடம் சமர்ப்பிக்க இடமில்லை.

இந்திய மத்திய அரசு அதிகாரிகள் மூடப் பட்ட உறையுள் ஒரு அறிக்கையை ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி அனந்தகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ளவை இரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளன.

வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ராஜீவ் கொலையை ஒரு இயக்கத்துடன் மட்டும் சம்பத்தப் படுத்தி விசாரிக்காமல் இதைப் பரந்த அளவில் பலகோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று 1999இல் ஜெயின் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

புத்தளத்தில் மாவீரர் தினத்தை புலிகள் கொண்டாடினரா?

இலங்கை வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உழங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) ஒன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள துங்கிந்த பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இவ் விபத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர்.

பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வான்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.ம்தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரசியத் தயாரிப்பான இந்த எம். ஐ24 ரக உழங்கு வானூர்திகள் (ஹெலிகொப்டர்) ஆறு ஏற்கனவே விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்திப்பட்டுள்ளன.

1 comment:

Anonymous said...

ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...