பிரித்தானியாவில் பாரிய எக்செல் மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் எனப்படும் மாவீர் தினம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. பிரித்தானிய வாழ் தமிழின உணர்வாளர்கள் மீண்டும் ஒரு முறை தம்மால் பாரிய அளவில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
50,000 பேர்வரை கொள்ளக்கூடிய மண்டபத்தில் ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் கைக்கூலிகளின் சதிகளையும் சவால்களையும் முறியடித்து சிறந்த முறையில் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடு செய்யப் பட்டது. அங்கு பிரபாகரன் படமே அல்லது புலிக்கொடியோ இருக்கவில்லை.
மண்டபம் நிறைந்து வழிந்து மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வேலை நாள் பாடசாலைநாளாக இருந்தும் 60,000 மக்கள் அங்கு வந்தது மக்களுக்கு தமிழ்த்தேசியத்தில் உள்ள அதீத அக்கறையைப் பறைசாற்றியது.
சீமானின் உரை அங்கு காணொளியில் ஒளிபரப்பப் பட்ட போது பலத்த கரவொலி எழுந்தது. நேரில் நடக்குகம் உரைகளுக்கு கூட கிடைக்காத வரவேற்பும் பரபரப்பும் சீமானின் கணொளி உரைக்கு கிடைத்தது.
No comments:
Post a Comment