Friday, 20 November 2009
மானம் கெட்ட இந்தியாவின் மீனவர்களை நிர்வாணமாக்கி சிங்களவர்கள் தாக்குதல்
தரையில் இந்தியப் பந்து வீச்சாளர்களை சிங்களத் துடுப்பாட்டக் காரர்கள் செம அடி அடித்து விளாச தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையினர் மீண்டும் நிர்வாணமாக்கித் தாக்கி மகிழ்கின்றனர். மானங் கெட்ட இந்திய மத்திய அரசு மீண்டும் மௌனமாக இருந்து தமிழர்கள் தாக்கப் படுவதை இரசிக்கிறது.
அண்மையில் இந்தியக் கடலோரக் காவற்படையினர்மீதும் சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதற்கு இந்திய மத்திய அரசோ கலைஞர் அரசோ எதுவித ஆட்சேபனையை இலங்கையிடம் தெரிவிக்கவில்லை.
அதற்கு முன்னர் சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டு மிரட்டி கச்சதீவிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அவர்களை கொதிக்கும் மணலில் நிற்க வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
இவற்றை வெளியில் சொன்னால் புகைப் படங்களைப் பாவித்து அடுத்த தடவை கடலுக்கு வரும்போது அவர்களைக் கொல்வோம் என்றும் மிரட்டினர்.
இது வரை பல நுற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் கொன்றும் பல ஆயிரக் கணக்கானொரை அங்கவீனராக்கியு முள்ளது.
இம்மீனவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தியா மௌனமாக இருக்கிறதா? அல்லது இவர்கள் பார்ப்பனர்கள் அல்ல வேறு "ஜாதி"யினர் என்பதால் இந்தியா மௌனமாக இருக்கிறதா?
முன்னர் இந்திய மீனவர்கள் மீது புலிகள்தாக்குதல் நடாத்துகின்றனர் என்று ஆரியப் பேரினவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் பொய் சொல்லித் திரிந்தனர். பின்னர் மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதால் இலங்கை நடவடிக்கை எடுக்கிறது என்றனர் அந்தக் கொத்தடிமைகள். எல்லை தாண்டிச் சென்றால் சுடவேண்டும் கொல்லவேண்டும் நிர்வாணமாக்க வேண்டும் என்பது இந்த அறிஞர்களின் அறிவுப்படி சர்வதேசச் சட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment