Friday, 20 November 2009
வீடு தேடி அலையும் சரத் பொன்சேக்கா
தன் வினை இப்போது தன்னைச் சுடுகிறது. கூடித் தமிழினக் கொலை செய்த சகோதரர்களும் படைத் தளபதியும் இப்போது எதிர் எதிர் அணியில். கொள்ளை அடித்தவர்களிடை கொள்ளையைப் பங்கிடுவதில் மோதல். மனித உரிமைகளை மீறிப் போரில் வென்றவர்கள்(?) வெற்றிக்கான புகழின் பயனை அடைவதில் மோதிக் கொள்கின்றனர்.
சரத் பொன்சேக்கா தன்னால்தான் போரில் வெற்றி கிடைத்ததாக நினைக்கிறார். அதை மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லை. எம்மால்தான் வெற்றியடைந்தீர்கள் என்று வெளியில் சொல்லி வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் இருக்கும் டில்லிக் கும்பல் தனக்குள் சிரித்துக் கொள்கிறது இப்போட்டியைப் பார்த்து. கோபாலபுரத்தில் இருந்து ஒரு முதலை கண்ணீர் வடிக்கிறேன் என்று அறிக்கை விட்டுப் புகழ் தேட முயல்கிறது.
சரத் பொன்சேக்காவை இந்த ஞாயிற்ற்குக் கிழமைக்குள் அவரது அரசால் வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும் படி இலங்கை அரசு பணித்துள்ளது. அவர் ஒரு வீடு தேடி அலைகிறார். அவருக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத் தரப்பில் இருந்து விடுக்கப் பட்ட மிரட்டலால் அவருக்கு யாரும் வீடு கொடுக்கிறார்கள் இல்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
the one who destroyed thousands of house is looking for a house. the one who killed thousands of people will look for some thing soonser.
the one who make the others to kill will face the same.
the one enjoyed others suffering (sadist) will also enojoy his family members sufferings.
Time will come. LTTE members who cheated rthe leader and work for mahintha will stab him back soon
Post a Comment