
கூகிள் நிறுவனம் கைப்பேசி(mobile phone)த்துறையில் பாரிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தவிருக்கிறது. கைப்பேசி, கைப் பேசிக்கான மென்பொருள் தொலைதொடர்புச் சேவை ஆகிய மூன்றும் ஒன்றாக கூகிள் வழங்கவிருக்கிறது. கைப்பேசித் துறையில் முதல்முதலாக மூன்றும் ஒரே நிறுவனத்தில் இருந்து வருவது இதுதான் முதல் தடவை.
Googlephone எனப்படும் இக்கைபேசியில் பெரிய தொடுகை உணர் திரையும் Apple’s iPhone 3GS இலும் பார்க்க இருமடங்கு துரிதமாக செயற்படும் திறனும் Android என்னும் மென்பொருளும் கொண்டது. Android மென்பொருள் பேசுபவர்களின் குரலை இனம் கண்டு எழுத்துருவில் மாற்றவல்லது. அத்துடன் முப்பரிமாண விளையாட்டுக்களும் Googlephoneஇல் உண்டு. Googlephoneஇன் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற அளவு அழைப்புக்களை செய்யும் வசதியும் உண்டு.
No comments:
Post a Comment