இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்தகச் சலுகை இலங்கையைப் பாதிக்காது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் முன் கூட்டியே மீசையில் மண் படாது என்கின்றனரா?
GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றிய 16 வறிய நாடுகளுக்கு இச் சலுகையை வழங்கியுள்ளது. அவற்றில் இலங்கை மட்டுமே சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்குகிறது.
இலங்கை அடைந்த நன்மை
gsp ஆல் இலங்கை அடைந்த நன்மையை அறிந்து கொள்ள உகந்த புள்ளி விபரம்: 2005-ம் ஆண்டு 99பில்லியன் ரூபாக்கள் ஏற்றுமதி வருவாய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்தது. ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை வழங்கியபின் அது 157பில்லியன் ரூபாக்களாக அதிகரித்தது. இதே வேளை அமெரிக்காவிற்கான எற்றுமதி வருவாய் 164பில்லியன்களில் இருந்து 173பில்லியன்கள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்காவிற்கான வளர்ச்சியிலும் பார்க்க பத்துமடங்கு அதிகரிப்பு.
ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையால் பயனடையும் துறைகளில் ஆடை அணிகலன் துறை மிக முக்கியமானதாகும். மற்றைய துறைகள் இறப்பர், மாணிக்கம் மற்றும் மரக்கறி வகைகளாகும்.
ஏற்படவிருக்கும் இழப்புக்கள்
இந்த வகையில் சுமார் 500மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாயை இலங்கை இழக்கவிருக்கிறது.
ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்வதால் நேரடியாக 270,000 பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்படவிருக்கிறது. இதனால் ஏற்படவிருக்கும் Domino Effect(தொடர் சரிவு)ஐக் கணக்கிடுவது மிகச் சிரமம். இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிப்படையப் போகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
ஏன் இலங்கை GSP+சலுகையை இழக்கிறது.
GSP+சலுகைக்கு உரித்துடமையாவதற்கு ஒரு நாடு 27 பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு அவற்றிற்கேற்ப நடக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அதில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
சலுகையின் பெறுமதி நூறு மில்லியன் டொலர்களாகும்.
இது சலுகையின் பெறுமதி மட்டுமே. சலுகையால் கிடக்கும் ஏற்றுமதி வருவாய் இதிலும் பல மடங்கு பெறுமதி உடையது. சலுகை இரத்து இலங்கையை இருமுனையில் பாதிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் ஆடை உற்பத்தித்துறை முதலாம் இடத்தை வகிக்கிறது. இலங்கைக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் முதலாம் இடத்தை வகிக்கிறது. இவ்விருவகையிலும் இலங்கை பாதிப்பை எதிர் நோக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கையின் ஏற்றுமதி 1.7 பில்லியன் யூரோக்கள் பெறுமதியானது. ஐரோப்பிய ஒன்றியம் இனி தனது இறக்குமதியை வேறு நாடுகளில் இருந்து செய்யும். இதனால் இலங்கையின் வர்த்தகம் பெரிதும் பாதிப்படையும். உலகின் 15 நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் GSP+சலுகையை வழங்கியுள்ளது. GSP+சலுகையை வழங்கிய பின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி பெரிதும் வளர்ச்சியடைந்தது. இச்சலுகையால் இலங்கை 7200 பொருட்களை வரிவிதிப்பின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்தது.
ஏற்கனவே உள்ள பிரச்சனை மோசமாகும்.
ஏற்கனவே இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை இலங்கையின் 17 விழுக்காட்டிலும் அதிகமான பணவீக்கத்தால் அதிலும் குறைந்த பணவீக்கமுடைய இந்தியாவுடனும் சீனாவுடனும் போட்டி போட முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+சலுகை இரத்து செய்து விட்டால் ஆடை உற்பத்தித்துறைமீதும் ஆபரணத் துறைமீதும் பலத்த அடியாக விழும். இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் வருமானத்தை இழக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் இலங்கையின் நாணயமதிபிப்பு இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டொலருக்கு எதிராக 5% தேய்மானம் அடைந்துள்ளது. பலவீனமான டொலருக்கு எதிராகவே பலவீனமடைகிறது. அதேவேளை சீன இந்திய நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு எதிராக மதிப்புக் கூடி வருகின்றன. இதனால் எரி பொருள் விலையேற்றத்தை சீன இந்திய உற்பத்தித்துறையிலும் பார்க்க இலங்கை உறப்த்தித்துறைக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்:
- ஆடை ஏற்றுமதியில் 13% சரிவு.
- தேயிலை ஏற்றுமதியில் 16% சரிவு
- ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி வருவாயில் 23% சரிவு.
- இத்தகைய சரிவுகளுடன் இலங்கை இந்த வரிச் சலுகை இரத்தால் மோசமாகப் பாதிக்கப் படப் போகிறது.
பொருளாதார நிபுணத்துவ கணிப்பு
வரிச் சலுகைகள் ஒரு உற்பத்தித் துறையில் திறனைக் குறைக்கும்.
சலுகைகள் இல்லாமல் வளரும் தொழிற்துறையே திறமையான துறையாக உருவெடுக்கும். நீண்ட கால அடிப் படையில் வரிச் சலுகை பாதகமானதே.
ஆனால் இலங்கையின் பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலையில் வரிச் சலுகை மிக அவசியம்.
2 comments:
Useful comment.
Very useful posting....
Post a Comment