சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அதிபர் பான் கீ மூன் அவர்கள் இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களைச் சந்தித்தார். இதை பான் கீ மூன் அவர்கள் வழமைக்கு மாறாக தனது பொது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருக்கவில்லை. அந்த சந்திப்பு முடிந்த பின்னும் அதுபற்றி வெளிவிடவில்லை. பின்னர் இந்த மறைப்பு பற்றி பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவப் பட்டபோது சந்திப்புத் தொடர்பான அறிக்கை பத்திரிகையாளர்களிடம் தரப்படும் என்றார். ஆனால் ஏன் பான் கீ மூனின் பொது நிகழ்ச்சி நிரலில் இச் சந்திப்பு மறைக்கப் பட்டது என்ற வினா மீண்டும் எழுப்பப்பட்ட போது பொது நிகழ்ச்சி நிரலில் அது இடம் பெற்றிருந்தது என்று பதிலளிக்கப் பட்டது. ஆனால் உண்மையில் அப்படி இடம் பெற்றிருக்கவில்லை. இது இன்னொரு கபடம்.
ஐநா தரப்பில் தெரிவித்ததன் படி பான் கீ மூன் - மஹிந்த சமரசிங்க சந்திப்பில் கலந்துரையாடப் பட்டவை:
- மனிதாபிமானம் மனித உரிமைகள் சம்பந்தப் பட்ட விடயங்கள்.
- அகதிகள் மீள் குடியேற்றம்.
- அகதிகளின் சுதந்திரமான நடமாட்டம்.
- ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கையைப் பாதுகாக்க முடியாத படி இலங்கை தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டுவிட்டது என்று இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பாகத் தெரிவிக்கப் பட்டதாம்.
இலங்கையின் மதிப்பை பாதுகாப்பதுதான் ஐநாவின் வேலையா?
No comments:
Post a Comment