இந்திய அமைதிப் படைஇலங்கையில் செய்த அட்டூழியங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. IPKF என்பது Innocent People Killing Force என்று இலங்கைச் சிங்களப் பத்திரிகைகள் கூட வர்ணித்தன. இதுபற்றி தொடர் கட்டுரை எழுதி வரும் தினமணி ராஜீவின் அட்டூழியப் படை செய்த வல்வெட்டித் துறைப் படுகொலையைப் பற்றி இப்படி எழுதியது:
இந்திய அமைதிப் படையின் செயற்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன. பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான். இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படை அடித்த கொள்ளைகள் பலப்பல. பாவித்த உள்ளாடைகளைக்கூட அந்தக்கேவலமான மிருகங்கள் விட்டுவைப்பதில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க அவர்கள் கொள்ளை அடித்ததை மறைத்து "தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம்" என்று திரித்து எழுதியிள்ளது தினமணி.
ஏற்கனவே இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் பற்றிய ஒரு கட்டுரையை தனது தொடரில் இருந்து தினமணி நீக்கியிருந்தது.
1 comment:
சிங்களத்தின் பொய் பிரச்சாரத்திற்கு துணைபோகும் தினமணி
//காட்டுக்குள் ஓடி தப்பிக்க முயற்சி செய்தார் பிரபாகரன்: கூட்டாளி தகவல்//August 28, 2009
ஆக இவர்களால் எழுதப்படுகின்ற "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' கூட நம்பகத்தன்மையானதாக இருக்குமா ??
என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது
http://suthumaathukal.blogspot.com/2009/08/blog-post_5218.html
எனக்கு இப்போது இந்த தொடர் இன்னுமொரு ஜெகத் கஸ்பாராக உருவெடுக்கின்றது என்பதே உண்மை போல் இருக்கின்றது
Post a Comment