இரு பாதணி உற்பத்தி நிறுவனங்கள் தமது சந்தைப் படுத்தல் ஆய்வாளர்களை வளர்ச்சியடையாத நாடொன்றிற்கு அங்கு பாதணிகள் விற்பனைக்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றது என்று ஆய்வு செய்ய அனுப்பின. இரு ஆய்வாளர்களும் தனித்தனியே அந்நாட்டிற்கு சென்றனர். அந்நாட்டில் எவர் கால்களிலும் காலணிகள் இருக்கவில்லை.
- ஒருவர் தயாரித்த அறிக்கை: இங்கு எவரிடமும் பாதணி அணியும் பழக்கம் இல்லை. இங்கு பாதணிகள் விற்க முடியாது.
- மற்றவர் தயாரித்த அறிக்கை: இங்கு எவரிடமும் பாதணிகள் இல்லை நிறைய பாதணிகள் இங்கு விற்கலாம்.
- பிரித்தானிய பிரதி அமைச்சர்: மக்கள் சட்ட விரோதமாக முட்கம்பி வேலிகளுக்குப் பின் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
- இந்திய எம்பி: முகாமில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக முட் கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன்.
- பிரித்தானிய அரசு: சட்ட விரோத முகாம்களைப் பராமரிக்க பிரித்தானியாவால் நிதி வழங்க முடியாது. பிரித்தானியா தனது நிது உதவிகளை நிறுத்துகிறது.
- இந்திய அரசு:
|
|
இந்திய நாடகத்தின் பின்னணி என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களை ஐக்கியநாடுகள் சபை இலங்கை முகாம்களில் உள்ள சிறார்கள் தொடர்பாக அனுப்பவிருப்பதாக தகவல்கள் ராதிகா குமாரசாமிமூலமாக முன்கூட்டியே அறிந்து கொண்டதாகாச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராதிகா குமாரசாமி முன்னாள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சாம் கதிர்காமரின் உறவினர். ஐநாவின் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பானவர். அவரின் பிரதிநிதியாகவே மேஜர் ஜெனெரல் கமோட் இலங்கை செல்லவிருப்பதாக அறிவிக்கப் பட்டது. மேஜர் ஜெனெரல் கமோட் ஒரு இராணுவ நிபுணர். அவர் வருகையின் பின் ஐநாவின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருக்கும். மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய். இராணுவ நடவடிக்கை தொடருமா என இலங்கை அஞ்சியது. மேற்குலக நாடுகள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுமா? இந்தக் கேள்விகளால் குழம்பிய இலங்கை மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களின் பயணத்தை வேண்டுமென்றே இழுத்தடித்து விட்டு இந்தியாவின் துணையை நாடியது. இந்தியா ப. சிதம்பரத்தையும் கலைஞரையும் வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றியது. அதுதான் இந்திய நாடாளமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம். இந்தியா வன்னி முகாம்களுக்கு நிதிதான் தேவை. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் அல்ல என்ற அபிப்பிராயத்தை சர்வதேச் அரங்கில் ஏற்படுத்த முயல்கிறது.
No comments:
Post a Comment