Tuesday, 20 October 2009

ஐநா பாதுகாப்புச் சபை உறுப்பினர் பதவிக்கு இலங்கையும் போட்டியிடுமா?


ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபை 5 இரத்து(வீட்டோ) அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தர மற்ற உறுப்பினர்களையும் கொண்டது. நிரந்தர மற்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
இவர்கள் பிராந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப் படுவர். தற்போது உள்ள நிரந்தரமற்ற உறுப்பினர்கள்:


Country Regional bloc(s) Permanent Representative
Burkina Faso Burkina Faso Africa Michel Kafando
Costa Rica Costa Rica Latin America and Caribbean Jorge Urbina
Croatia Croatia Eastern Europe Neven Jurica
Libya Libya Africa (Arab) Abdurrahman Mohamed Shalgham
Vietnam Vietnam Asia Lê Lương Minh

Country Regional bloc(s) Permanent Representative
Austria Austria Western Europe and Other Thomas Mayr-Harting
Japan Japan Asia Yukio Takasu
Mexico Mexico Latin America and Caribbean Claude Heller
Turkey Turkey Western Europe and Other Ertuğrul Apakan
Uganda Uganda Africa Ruhakana Rugunda

இப்பொழுது உள்ள நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஆசியப் பிராந்தியத்திற்கான உறுப்பினர் பதவியை இப்போது ஜப்பான் வகிக்கிறது.
ஆசியப் பிராந்தியத்தில் சீனா நிரந்தர உறுப்பினராக இருப்பதால் இந்தியாவும் ஜப்பானும் நிரந்தர மற்ற உறுப்பினருக்கான பதவியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை பலதடவை இப்பதவியில் இருந்துவிட்டன. இப்பதவியில் ஒரு முறை மட்டுமே (1960-61)இலங்கை இருந்தது.

ஜப்பானைத் தொடர்ந்து யார் அடுத்த ஆசியப் பிரந்தியத்திற்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப் போகிறார்கள் என்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இப்பதவிக்குப் போட்டியிட வேண்டும் என இலங்கையின் வெளியுறவுத்துறையில் சிலர் விரும்புவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இப்போதே தமிழர் விடயத்தில் பல தவறுகளை பாதுகாப்புச் சபை செய்து விட்டது. அங்கு இலங்கை உறுப்பினர் ஆனால் தமிழர்களுக்கு என்ன நடக்கும்?

நாடுகடந்த தமிழீழ அரசிற்கு சில முக்கியமான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ள வேளையில் இலங்கைக்கு பாதுகாப்புச் சபையில் ஒரு உறுப்பினர் பதவி அவசியம். ஆனால் இந்தியா களத்தில் இறங்கினால் என்னவாகும்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...