
ராஜபக்சே அவர்களே!
உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இருந்து வெற்றிகளையும் புகழையும் தேடித்தந்த பொன்சேகா இப்போது ஆறாம் இடத்திற்கு மாறியுள்ளார். இதனால் பலதொல்லைகளை எதிர்பார்க்கவும். பொன்சேக்கா உங்கள் பதவிக்கே ஆப்பு வைக்கலாம். இதறகுப் பரிகாரமாக பொன்சேக்காவிற்கு உரியதும் உயரியதுமான பல காணிக்கைகளை செலுத்த வேண்டிவரும். இதனால் உங்கள் சகோதரங்களுடன் முரண்பட வேண்டி வரும்.
இதே வேளை இவருடன் உங்கள் பாவக் கிரகமான யூஎன்பியும் பாதகாதிபதியான மங்கள சமரசிங்கவும் இணைந்தால் நிச்சயம் உங்களுக்குக் கோவிந்தாதான்.
இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்து நல்ல பணவரவைக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம் இனி மூன்றாம் இடத்திற்கு மாறவருக்கிறது. இதனால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் உங்கள் வீட்டை சீனாவிற்கு ஈடுவைக்க வேண்டி ஏற்படலாம். அது நிரந்தர விற்பனையிலும் முடியலாம்.
வானத்தில் இருந்த சனியை ஏணி வைத்து இறக்கியது போல் உங்கள் பத்தாம் இடத்தில் இருக்கும் முகாம்கள் பலதொல்லைகளை இனிக் கொடுக்கவிருக்கிறது. கோடு கச்சேரி என்று நீங்கள் அலைய வேண்டிவரும். இதனால் சில பணவரவுகளை நீங்கள் அயல் வீட்டுக் காரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள். அங்குள்ள இழிச்சவாயர்கள் இதற்கு தடையாக இருக்காமல் உங்கள் வீட்டில் எல்லாம் ஒழுங்காக இருப்பது போல் அவர்களை ஏமாற்றிச் சமாளிக்கலாம். அதற்கு பார்பன ஊடகங்களும் ஊடகர்களும் கைகொடுக்கும். நீங்களும் அவர்களுக்கு நிறையக் "கை" கொடுக்க வேண்டும்.
எட்டாமிடத்தில் மறைந்திருக்கும் அமெரிக்கா என்ன வடிவம் எடுத்து உங்களுக்கு அள்ளிவைக்கப் போகிறதோ தெரியாது. உங்கள் விட்டில் ஒரு பகுதியை அவருக்குத் தாரை வார்க்க வேண்டி வரலாம். நாடுகடந்த அரசும் தலையிடியாக அமையும்.
உங்களுக்கு சீனா திசையில் இந்திய புத்தி நடக்கிறது. இக்கால கட்டத்தில் உங்களை யாராலும் அசைக்க முடியாது என்ற மமதையை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சீனகிரகங்கள் ஒன்றுக் கொன்று பகையான கிரகங்களாதலால் கிரக யுத்தம் நடக்கும்போது உங்கள் குட்டு வெளிப்பட்டு பாரிய பிரச்சனையை எதிர் நோக்க வேண்டி வரும். அருணச்சலேஸ்வரரை மௌன விரதம் இருந்து தரிசியுங்கள். சேலையணிந்த முசோலினியை அடிக்கடி தரிசித்து ஆசி பெற்றுக் கொள்ளவும். இரசியச் அழிவீஸ்வரன் கோவிலிற்கு நேர்த்திக் கடனை இப்போதே வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
1 comment:
இந்தியா இப்போது ஆப்பசைத்த குரங்கு...
மலயாளிகளின் குரங்கு வேலையால்,தமிழ் இனம் அழிவில்:
இந்தியா வேறு:தமிழர்கள் வேறு
Post a Comment