
வன்னி வதை முகாம்களின் ஒன்றான பூந்தோட்ட முகாமிலிருந்து தப்பி ஓடியவர் ஒருவர் வெளியில் மஹிந்த ஆட்சியில் மக்கள் இருக்கும் நிலையைக் காணச் சகிக்காமலோ என்னவோ திரும்ப முகாமுக்குள் நுழைய முற்பட்டபோது பிடிபட்டாராம்.
இலங்கைத் காவல் துறையின் பேச்சாளரான மூத்த பிரது கவற் துறை பேரதிபர் நிமால் மெடிவக்கவின் தகவலின் படி பூந்தோட்ட முகாமிலிருந்து ஒருவர் தப்பி ஓடினாராம் பின்னர் திரும்பி வந்து விட்டாராம்.
வேறு இடங்களில் இருந்து வரும் தகவலின் படி பூந்தோட்ட முகாமிலிருந்து ஒருவர் வெளியே "அழைத்துச்" செல்லப் பட்டார். அவர் கொல்லப் பட்டு விடுவார் என்று அறிந்த அவருடன் இருக்கும் மற்ற முகாம்வாசிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போது ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வேளையில் முகாமுக்குள் ஒரு கலவரத்தையோ அவர்களைக் கொன்று குவிப்பதையோ விரும்பாமல் அவரை மீண்டும் கொண்டுவந்து முகாமுக்குள் சேர்த்துவிட்டனராம். அதற்கு விடும் கயிறுதான் தப்பி ஓடியவர் திரும்பி வந்தார் என்பது.
No comments:
Post a Comment