
முதலில் தனது பரம்பரைத் தொழிலான அடுத்த இந்தியப் பிரதமர் வேலையை விரைவில் செய்யவிருக்கும் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.
கொடாநாட்டுக் கொடியிடையாள் துயிலெழுந்து சனல்-4 தொலைக்காட்சி பற்றிக் குரலெழுப்புகிறார்.
கோபாலபுரத் தாத்தா தான் மைய அரசிற்க்கு கொடுத்த அழுத்தத்தால் மைய அரசு இலங்கையை மிரட்டுகிறதாம். இலங்கை பயந்து நடுங்கி இனி பணிந்து விடும் பாருங்கோ! முகாமில் வதை படும் மூன்று இலட்சம் தமிழர்களுக்கும் இனி உல்லாச வாழ்க்கைதான்.
தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் மன்மோகன் சிங்கையும் சேலையணிந்த முசோலினி என வர்ணிக்கப் படும் சோனியாவையும் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார்களாம். குற்றாவாளிகளிடம் நீதி கேட்கிறார்கள்.
இந்தக் குடுமிகள் சும் ஆடுமுங்களா? தேர்தல் விரைவில் வரப் போகிறது போலிருக்கிறது. வாழை இலைக்கு மேல் புரியாணிக்கும் கீழ் காந்திதாத்தா படம் அச்சிட்டதாளுக்கும் தயாராகுங்கள்.
No comments:
Post a Comment