Tuesday, 5 May 2009

செல்வி ஜெயலலிதாவின் எழுச்சியும் பார்ப்பனர்களின் மெளனமும்




செல்வி ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக்கால பேச்சு மாற்றம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது பேச்சு மாற்றம் மட்டுமா அல்லது மனமாற்றமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால் இது பல ஈழத்தமிழர்களின் வயிற்றில் பால்வார்த்தது உண்மையே. ஈழத் தமிழர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரில் பலத்த ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர். திமுக தமது முதுகில் குத்திவிட்டதாகவே உறுதியாக நம்புகின்றனர். திமுக ஒரு நாளும் தமிழர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்ததில்லை என்று கூறுவோரும் உண்டு. உண்ணாவிரத நாடகம் கலைஞரை ஈழத்தமிழர்கள் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளியது.
.
செல்வி ஜெயலலிதாவின் கையைப் பற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் ஈழ தமிழர்கள் உள்ளனர். அவர்களின் இன்றைய நிலை அப்படி. ஆனால் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது ஈழத் தமிழ் எதிர்ப்பாளர்களான சோ இராமசாமி ஹிந்து ராம் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் செல்வி ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் தொடர்பான பேச்சுக்களுக்கு எந்த விமர்சனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

4 comments:

Anonymous said...

//ஈழத் தமிழ் எதிர்ப்பாளர்களான சோ இராமசாமி ஹிந்து ராம் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் செல்வி ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் தொடர்பான பேச்சுக்களுக்கு எந்த விமர்சனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?//

சங்கராச்சாரியார் கதி ஆகிவிடக் கூடாதே என்ற பயம் தான்

Anonymous said...

அவாளுக்கெல்லாம் நன்னா தெரியுமே!
தேர்தல்ல என்ன வேணும்னாலும் சொல்லலாம்.
எப்படியாவது ஜெயிச்சா போதுமோன்னா!

அப்புறம் யார் என்ன செய்ய முடியும்.
ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுடலாமே!

ரங்குடு said...

//அவாளுக்கெல்லாம் நன்னா தெரியுமே!
தேர்தல்ல என்ன வேணும்னாலும் சொல்லலாம்.
எப்படியாவது ஜெயிச்சா போதுமோன்னா!

அப்புறம் யார் என்ன செய்ய முடியும்.
ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுடலாமே!

//

சாமானியர் கருணாநிதி போன முறை என்ன வெல்லாம் சொல்லி (வீட்டுக்கு ஒரு கலர் டி.வி, தலைக்கு 2 ஏக்கர் நிலம்) ஜெயித்து பதவிக்கு வர வில்லையா? எப்படியாவது அவர் ஜெயிக்கலாம், ஜெயலலிதா ஜெயிக்கக் கூடாதா?

இந்த முறை தேர்தலுக்கு சிலநாள் முன்பு திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஓட்டுக்களை அள்ள முயலவில்லையா?

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சோ போறவர்களின் ஆசை யல்ல. தீவிர வாதம் நடத்தும் புலிகளுக்குத்தான் அவர் எதிர்ப்பாளர்.

இன்னும் சிதம்பரம் போன்றவர்களின் மீது செருப்பு, உருட்டுக்கட்டை போன்றவற்றை வீசுபவர்களுக்குத்தான் அவர் எதிர்ப்பாளர்.

ஜய லலிதாவும் தீவிர வாதத்திற்குத்தான் எதிர்ப்புக் காட்டினாரே தவிர இலங்கைத் தமிழர்களுக்கு அல்ல.

அவர் தேர்தலில் வென்றாலும் தமிழ் ஈழ / இலங்கைப் பிரச்சனையில் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாது. இருந்தாலும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததிற்கு அவரைப் பாராட்டலாம்.


ஆனாலும் பெரியாரின் சீடர்களுக்கு இவர்கள் என்ன செய்தாலும் தப்பாகத்தான் படும்.

Anonymous said...

இலங்கை அகதி பரதேசி பொத்திகிட்டு போடா சைக்கோ நாயே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...