எஞ்சி இருக்கும் 5 கிலோ மீட்டர் பகுதியை மீட்க சிங்கள-ஆரிய கூட்டமைப்பு பலத்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் சிங்களப் படைத்தரப்பு பலத்த இழப்பைச் சந்தித்துள்ளது. கடல் வழியாக படைகளை இறக்க மேற்கொண்ட மூன்று முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்தன. புலிகளின் நீரடி அதிரடிப்படை சிங்களக் கடற்படைக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தின. நீருந்து விசைப் படகுகள் சில தாக்கி அழிக்கப் பட்டன. பல பீரங்கிப் படகுகள் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடின.
வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு செய்து வருகிறது.
அவசரமாக மேலதிக ஆயுதங்கள் தேவைப் படுகிறது.
சிங்களப் படைகளுக்கு போரை முடிக்க மேலதிக ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப் படுகிறது. அவற்றை அனுப்ப சனியாளின் அரசு மேற்கொண்ட முயற்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்கள் முறியடித்தனர்.
இரண்டு காரணங்களுக்காக போரை உடன் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆரிய-சிங்களக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது:
1. சனியாள் அதிகாரத்தில் இருக்கும் போது தமிழனை அழித்துவிடு.
தேர்தலின் பின் என்ன நடக்கும் என்று தெரியாது. சனியாள் அதிகாரத்திலிருந்து துாக்கி எறியப்பட்டால் என்ன நடக்கும் என்ற அச்சம் சிங்களவர்களை ஆட்டிப் படைக்கிறது. சனியாள் ஆட்சியிலிருக்கும் போதே தமிழர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் விருப்பம்.
2. உலகெங்கும் உள்ள தமிழர்களின் போராட்டம்.
தமிழர்கள் உலகெங்கும் இலங்கை அரசுக்கு எதிராக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயற்படுகின்றனர். பல முக்கிய அரசுகளைத் தமக்கு ஆதரவாகத் திரட்டி வருகின்றனர். இதைப் பார்த்து இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சொன்னார் இவர்கள் பிரபாகரன் இல்லாமலே தமிழீழம் அமைத்து விடுவார்கள் என்று. பிரித்தானியாவும் பிரான்சும் தமது வெளியுறவுத் துறை அமைச்சர்களை இலங்கைக்கு அனுப்பின. அவர்களால் அங்கு எதையும் சாதித்து விடவில்லை. ஆனால் அவர்களிடம் இலங்கை அரசு இரு உறுதி மொழிகளை வழங்கியது: 1. கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாது. 2. போர் முனையில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு உகந்த உதவிகள் வழங்கப்படும். அவரகள் தமது நாடுகள் திரும்பி இதை அங்குள்ள தமிழர்களிடம் தெரிவித்தபோது தமிழர்கள் சொன்னார்கள் இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டாது என்று. தாம் அதை உன்னிப்பாக அவதானித்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று தமிழர்களிடம் பிரித்தானிய அரச அறிவித்துள்ளது. இதேவேளை இவ்விரு நாடுகளைவிட அமெரிக்கா தமிழர் பிரச்சனை தொடர்பாக திரைமறைவில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆக மொத்தத்தில் இன்னும் இரு வாரங்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வராவிடில் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு பாரிய திருப்பு முனையைச் சந்திக்க வேண்டி வரும்.
2 comments:
அருமையான படைப்பு...
வாழ்த்துகள்...
உலகத் தலைவர்கள் உணர்கிறார்கள்.
இந்தியாவின் சோனியாவுக்குப் புரிய வில்லை.
தமிழகத்தின் செருப்புக்கள் பறக்கட்டும்.புரியும் மொழி அது ஒன்றுதான்.
Post a Comment