Saturday 16 May 2009

இலங்கை அரசின்மீது போர்க்குற்றம் சுமத்தப் படலாம்


இலங்கையின் வட பகுதியில் பாரிய மனிதாபிமானப் பிரச்சினையை தோற்றுவித்துள்ள அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒரு நடவடிக்கை இப்போது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். வடபகுதிப் போர் முனையில் என்ன நடைபெறுகின்றது என்பதற்கு சரியான கணக்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர், "கடுமையான எறிகணைத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன" எனவும் குறிப்பிட்டார்.
.
.
பக்கச்சார்பற்ற கண்காணிப்பாளர்களையும், ஊடகத்துறையினரையும், தொண்டு நிறுவனங்களையும், அனைத்துலக அவதானிப்பாளர்களையும் போர்ப் பிரதேசத்திற்கு சென்று, அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்க்க விடாமல் தடுப்பது என்பது, அவ்வாறு தடுப்பவர்கள் எதையோ மறுக்கின்றார்கள் எதையோ மறைக்க முனைகின்றர்கள் என்பதையே காட்டுகின்றது எனவும் அவர் மேலும் தெரித்தார்.
.
.
இதுதொடர்பில் நவநீதம் பிள்ளைஅவர்களது பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் கருத்து தெரிவிக்கையில் போர்க்குற்றம் என வகைப்படுத்துவதற்குரிய ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

1 comment:

வெத்து வேட்டு said...

yeah ltte is not around to be charged for war crimes :)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...