
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணத்தையும் சசி மாஸ்டரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மூவரில் ஒருவர் சொர்ணம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்த 50 உறுப்பினர்களில் சொர்ணமும் ஒருவர். அந்த 50 பேரில் பிரபாகரன், பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், சொர்ணம் எனப்படும் அந்தனிதாஸ் ஆகிய மூவருமே எஞ்சி இருந்ததாகச் சொல்லப் பட்டது. சசி மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நில அளவைப் பிரிவின் பொறுப்பாளர் ஆவார். இவர்கள் இருவரையும் இன்று 16ம் திகதி நடந்த சண்டையில் கொன்று விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவம் இவர்கள் கொல்லப்பட்ட விபரம் எதையும் வெளியிடவில்லை. இவர்கள் உடல்கள் கைப்பற்றப் பட்டதாகவும் தகவல் இல்லை.
1 comment:
srilankan army r son's of bitches beocz they can't fight with ltte directly wankers need support from india
Post a Comment