இலண்டனில் உள்ள இந்தியத் தூதுவரக்த்தை தமிழ் ஆர்ப்பாட்டக் காரர்கள் முற்றுகையிட்டனர். நூற்றுக் கணக்கான தமிழர்கள் இந்திய எதிர்ப்பு வாசகங்களை எழுப்பியவாறு விசா வழங்கும் பிரிவினூடாக உயர் ஸ்தானியர் அகத்துள் நுழைந்தனர். பெரும் மனிதப் பேரழிவை உண்டுபண்ணும் இலங்கைப் போரை இந்தியா உடன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கண்ணாடிகள் கல்விச்சினால் உடைக்கப் பட்டன.
பின்னர் காவல்துறையிடர் தலையிட்டு அங்கிருந்து அவர்களை அப்புறப் படுத்தினர்.
இதேபோன்ற முற்றுகை இலண்டனில் உள்ள இலங்கைத் துாதுவரகத்திலும் நடாத்தப் பட்டது. அங்கும் கண்ணாடிகள் உடைக்ப் பட்டன.
கனடாவில் அமெரிக்கத் தூதுவரகம் முன் பெரும் ஆர்ப்பாட்டம்.
கனடா ரொறென்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் தமிழர்கள் பெருந்த்திரளாக அணிதிரண்டு தொடர் பேராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நிலமையைகட்டுப்படுத்த முடியாமல் பிறபகுதிகளில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பெரும் திரளாக மக்கள் கூடியதால் பல சாலைகள் மூடப்பட்டன. அண்மையில் இருக்கும் பல்கலைக் கழகமும் மூடப்பட்டது. இம் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
1 comment:
டெல்லியில் உள்ள மலயாலிகலை துரத்தி அடித்தால்தான்,நாம்(தமிழர்கள்) நிம்மதியாக வாழ முடியும்!
இவர்கள் புளிய மரம்:தான் மட்டுமே வளர்வார்கள்.....அடுத்தவனை வளர விடமாட்டார்கள்
Post a Comment