
தமிழ்நாட்டுத் தலைவர்கள் மேல் ஈழத் தமிழர்களுக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு காலத்தில் அண்ணாவின் படம் பெரும்பாலான தமிழ் வீடுகளை அலங்கரித்ததுண்டு.
ஈழத்தமிழர் அல்லலுக்குள்ளான போது ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்கள் தந்தை பெரியாரிடம் உதவி கேட்டுச் சென்றார். பெரியார் கூறியது இதுதான்:
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது
இந்த உண்மை இன்றும் உண்மைதான். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் ஆதரவை நாம் நன்கு அறிவோம். அவர்களால் எமது போராட்டம் வளர்ந்தது. ஆனால் அரசியல் ரீதியில் உதவிசெய்யக்கூடிய அதிகாரம் தமிழ்நாட்டிடம் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் நேற்று மட்டும் சிங்களக் கொலை வெறியர்கள் 272 அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து பல நூற்றுக்கணக்கானோரை அவயங்கள் இழக்கச் செய்த வேளையில்ஆறு மணித்தியாலத்தில் போர் நிறுத்தம் செய்த மாவீரர் கருணாநிதி என்ற் பொய்ப் பிரசாரம் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தமை பல தமிழர்களையும் கொதிப்படையச் செய்துவிட்டது.
வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் மக்கள் ஐரோப்பியா அமெரிக்கா போன்ற நாடுகளில் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து கதைக்கத் தொடங்கி விட்டனர். வழமையாக இவற்றை அனுமதிக்காத ஊடகங்கள் இம்முறை இவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன. சொல்லப் பட்ட சில கருத்துக்கள்:
நாடகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் இன்று நடிகன் ஆகிவிட்டார்.
மற்றவர்களுக்கு திரைக்கதை எழுதியவர் இன்று பிரணாப் முகரிஜீ எழுதிய திரைக்கதைக்கு நடிக்கிறார்.
நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.
பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.
எமது நாட்டில் போரை நீங்கள் நிறுத்தாவிட்டாலும் எம் மக்கள் உங்கள் நாடகங்களை பார்க்கும் நிலையில் இல்லை.நீங்கள் ஒரு கலை மேதை என்பதை மக்கள் அறிவார்கள். நாங்கள் நிம்மதியாக இருக்கும் போது சொல்லி அனுப்புகின்றோம் அப்ப வந்து எமக்கு நடித்து காட்டுங்கள்.எமக்கும் பொழுது போகும்.
1 comment:
1)மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?
2)இத்தாலி சூப் நல்லா இருக்குமா?
3)முதுகு சொரிவது லாபகரமான தொழிலா?
4)பெரியார் மடாலயம்,வீரமணி சாமிகள் தற்போது வாங்கும் குரு தட்சினை எவ்வளவு?
5)மஞ்சள் துண்டு அணிவதால் புதி பிசக வாய்ப்புண்டா?
6)நான் கதை வசனம் எழுதுவேன்:முதல்வராக வாய்ப்புண்டா?
Post a Comment