ஆட்சி ஒருவர் கையில் அதிகாரம் இன்னோருவர் கையில் என்ற இரண்டும் கெட்டான் இந்தியாவில் வெளிநாட்டுத் துடுப்பாட்டக்காரர்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தீர்மானம் எடுக்க மிக அதிகமான நேரம் எடுத்தற்கு காரணம் இந்த இரண்டும் கெட்டான் கட்டமைப்புத்தான் என்று பலரும் கூறினர். தக்க தாக்குதல் அணியை அனுப்பாததால் பலத்த இழப்பை மும்பையில் சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது லாகூரில் இலங்கை அணியிர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாக்கிஸ்தானில் இருந்து மறைமுக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இனி இந்தியா வரும் வெளிநாட்டு துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து வருமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
இப்போது பாக்கிஸ்த்தான் துடுப்பாட்டத்தின் எதிர்காலம் மிக மிக சந்தேகமான நிலையை அடைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எந்த பன்னாட்டு துடுப்பாட்டமும் நடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் தீவிரவாத அமைப்புக்கள் இனி இந்தியாவில் நடக்கும் துடுப்பாட்டத்தை குழப்ப என்ன செய்வார்கள்? இதைத் தடுத்து நிறுத்தும் வலுவும் திறனும் சோனியா காந்தியின் ஆட்சிக்கு இருக்கிறதா? இவை விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment