

இலங்கையில் மாதம்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இலங்கைப் படையினரின் விமானக்குண்டு வீச்சாலும் எறிகணை வீச்சாலும் உடல் சிதறி கொடூரமான முறையில் கொல்லப் படுகின்றனர். இந்த இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் பயிற்ச்சிகள் என்பன இந்திய ஆட்சியாளர்களால் வழங்கப் படுகின்றன. அந்த ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்காளியாக உள்ளது.
எனக்கொரு உடன் பிறப்புண்டு
சென்னையிலே கோபாலபுரத்திலே
குடும்பமோ பெரிய குடும்பம்
ரெட்டைக் குடுமியாம்
கலகக் கண்மணிகள் குடும்பம்
பிரான்சிலே சீக்கியத் தலைப்பாகைக்கு
இருக்கும் மரியாதை கூட
என் பிள்ளைகளுக்கில்லை
அவர்கள் உடல் சிதறி இறக்கின்றன
என்பிள்ளைகளை கொல்ல
ஆயுதம் கொடுப்பவளுடன்
ஒன்றாய் ஆட்சி செய்கிறது
என் உடன்பிறப்பு
No comments:
Post a Comment